பக்கம்:தமிழ்க் காதல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

தமிழ்க் காதல்


குறுந்தொகைப் பாட்டால் அறிகின்றோம். காதலன் புணர்ச்சி நிறைவில் காதலியை நோக்கி, இப்போது நம் உடல்களா கலந்தன? "அன்புடை நெஞ்சந் தாம் கலந்தனவே” (குறுந் 10) என்று நாகரிகமாக நலம் பாராட்டுகின்றான். 2. இடந்தலைப்பாடு தற்செயலாக ஒருநாள் கண்ட இருவர் .ன் ளம் புணர்ந்தனர்; காதலராயினர் அடங்கிய வேட்கை பெருகிற்று. முதல்நாள் கண்டவிடத்தே இன்றும் காணலாம் என்ற நம்பிக்கையோடு தலைவன் தானே அவ்விடம் செல்கின்றான். ஆராக் காதலுடைய தலைவியும் அவனுக்கு முன்னரே வந்து அங்கு நிற்கின்றாள். ஏன்? ஒருமுறை ஆண் புல்லியபின், பெண்ணுக்குக் காமம் சிறக்கும். முன்போல தோழியரொடு விளையாட வந்தும் விளையாட்டில் மனங்கொள்ளாள்: பூப்பறித்து மலர் தொடுக்க உள்ளம் நாடாள். அவள் காதற் பெருக்கை உணர்ந்த தலைவன், "ஆடலும் தொடுத்தலும் செய்யாது தனித்துநிற்கும் நீ யாரோ, உனக்கு என் வணக்கம். கண்டவர் கண்ணைப் பறிக்கும் அழகியே! கடல் வாழ் தெய்வமோ நீ?” - யாரை யோநிற் றொழுதனம் வினவுதும் கண்டோர் தண்டா நலத்தை தெண்டிரைப் பெருங்கடற் பரப்பின் அமர்ந்துறை அணங்கோ(நற்.155) என்று தன் காதற்பறையை முழக்குகின்றான்; அழகுத் தெய்வமாகத் தொழுகின்றான். "வளை ஒலிப்ப நண்டினை ஆட்டுபவளே! நண்டினை ஆட்டுபவள் போலக் கூந்தலால் முகத்தை மறைத்து நிற்பவளே மாலை மறையின் நின் முயக்கம் கிடைக்கும்” (ஐங். 197) என்று வாயூறி மொழிகின்றான். என் சொல்லுக்கெல்லாம் மறுமொழி சொல்லாது நாணுபவளே! நின் நாணம் என் காமத்தைப் பெருக்கின் தாங்குவது எப்படி? (“காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ”) என்று தானே தானே பன்னுகிறான். இடந்தலைப்பாடு பற்றி மூன்று பாடல்களே (ஐங். 197, நற். 39; 155 சங்கவிலக்கியத்தில் உள. புணர்ச்சி வேட்கை காணப்படுவதன்றிப் புணர்ந்த குறிப்புச் சிறிது இப்பாடல்களில் இல்லை. இயற்கைப் புணர்ச்சி, பாங்கற் கூட்டம், தோழியிற்கூட்டம் என்ற குறியீடுகள் காதலரிடைப் புணர்ச்சியுண்டு என்பதை வெளிப்படையாகக் காட்டுவது போல, இடந்தலைப்பாடு (தொல்.1443) என்னும் குறியீடு காட்ட்வில்லை. இதன் உட்கோள் என்ன? கண்டால் முயங்குதல், முயங்குதற்கே காணுதல் என்பது ஆசைக்காமம் ஆகுமன்றி அன்புக் காமம் ஆகாது. காதலர்கள் புணர்வு விருப்பின்றியும் கண்டு கொள்வார்; கர்ணுந்தோறும் புணர்வு மேற்கொள்ளார் என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/58&oldid=1237181" இலிருந்து மீள்விக்கப்பட்டது