பக்கம்:தமிழ்க் காதல்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை பாகுபாடு

53


அவனது பொங்கிய காதலுக்குச் செவிசாயாள். அவன் அரிது முயன்று ஆர்வத்தோடு கொண்டுவரும் கையுறையை ஏற்க மறுப்பாள். வேண்டுமென்றே கூட்டம் நிகழாவாறு நாட் கடத்துவாள். தலைவியின் அருமையைத் தலைவன் உணர வேண்டும் என்பதும், தலைவனின் உறுதியைத்தான் உணர வேண்டும் என்பதுமே தோழி இங்ங்னம் செய்வதன் நோக்கம். அகத்திணைக்கண் மடல் அல்லது மடல்மா என்பது பனங்கருக்கால் செய்யப்பட்ட குதிரையைக் குறிக்கும்.இக் குதிரைக்கு ஆவிரம்பூ மாலையும் மணியும் அணிதல் உண்டு. (குறுந்.173) காமுற்ற பெண்ணை எய்தப்பெறாத ஆடவன் மார்பில் எலும்பு மாலையும் தலையில் எருக்க மாலையும் கொண்டு மடல்மாமேல் ஏறித் தெருவில் வருவான் (குறுந் 17, 182). இவ்வழக்கு மடலேறுதல் எனப்படும். இதனால் தலைவனின் திட்பத்தையும் அவன் காதற்கு இலக்கான நங்கையையும் ஊரார் அறிவர்; மேலும் அரம்போலும் பனங்கருக்குப் பட்டுப்பட்டு அவன் மேனியிலிருந்து ஓடிவரும் குருதியொழுக்கைக் கண்டு இரக்கங் கொள்வர். இன்ன காதலனுக்கு மகளைக் கொடுக்க மறுக்கலாமா என்று அவள் பெற்றோரைக் குறையுங் கூறுவர். ஆதலின் ஊரறிய மடலேற்றம் நிகழாதபடி மணங்கள் முடிந்துவிடும் என அறியலாம். தோழி, முன் சொல்லியபடி தலைவனது குறைக்குச் செவிசாய்க்காது, கையுறைக்குக் கைகொடாது காலந் தாழ்த்தும்போது, இனி மடலேறுவது தான் எண்ணியது எண்ணியாங்கு எய்துவதற்கு வழி என்று அவன் அவளிடம் கூறுவான். மாவென மடலும் ஊர்ப பூவெனக் குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப மறுகின் ஆர்க்கவும் படுப பிறிதும் ஆகுப காமங்காழ்க் கொளினே. (குறுந் 71) இக்கூறுகை தோழிக்குச் சிறிது கலக்கத்தை உண்டாக்கும். அதன்பின் தோழி துணையால் களவு நீளவும் காமம் செழிக்கவும் காண்கின்றோம். ネ . சங்கப் புலவர் மாதங்கீரனார் பாடிய செய்யுட்கள் இரண்டே (குறுந். 182, நற். 377) அவ்விரண்டும் மடல் மாத் துறை பற்றியன. "மடல்பாடிய மாதங்கீரனார்’ என்ற சிறப்புப் பெயர் இப்புலவர்க்கு வழங்கியிருத்தலைக் கருதுங்கால், இரண்டு சிறிய பாடல்களுக்காக இப் பெயர் பெற்றிரார் என்றும், இவ்வொரு துறையில் பல பாடல்கள் ஆக்கியிருப்பர் என்றும் துணியலாம். மடல்மாப்பொருள் குறித்துப் பதின்மூன்று பாட்டுக்கள் சங்கஇலக்கியத்து உள. இவற்றுள். நற்றிணை 143, 152, 342, 377; குறுந்தொகை 14, 17, 32, 173, 奠 ஒன்பதும் ஐந்திணைக்கு உரியவை. கலித்தொகை 138, 139,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/67&oldid=1237186" இலிருந்து மீள்விக்கப்பட்டது