பக்கம்:தமிழ்க் காதல்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

தமிழ்க் காதல்


140, 141 என்ற நான்கும் பெருந்திணைக்கு உரியன. ஐந்தினை மடலுக்கும் பெருந்திணை மடலுக்கும் நுண்ணிய பெரிய வேறுபாடு உண்டு. மடல்மா ஏறுவேன் என்று வாயள விற் சொல்லுதல் ஐந்திணையாம்."மடல்மா கூறும் இ.லுமார் உண்டே” (தொல்.10.17) என்பது இலக்கணம். அவ்வாறன்றி மாமேல் றியே காட்டும் செய்கை பெருந்திணையாய் விடும். 'எறிய மடற்றிறம்” (தொல், 969) என்ற தொடரில் ஏறிய' எனவரும் இறந்த காலவினை பெருந்திணை யிலக்கணத்தைச் சுட்டுதல் காண்க. பகல் இரவுக் கூட்டங்கள் - களவொழுக்கம் திடீரென நின்றுபோதற்கு இடனுண்டு. தோழியின் உறுதுணையால் அது நீடித்து ஓடுகின்றது. தோழி பெண்ணாயினும் பணிமகளாகலின் தலைவியைவிடத் தனித்துச் செல்லும் உரிமையும் கடமையும் அவளுக்கு கண்டு. காதலோர் தம் கூட்டத்துக்கு தகும் இடம் எது? தகுங்காலம் எது என்று அவளால் காணமுடியும். எனினும், அவளும் ஒரு குமரியாதலானும் எவல் மகளாதலானும் சில எல்லைக்கு உட்பட்டே தவிசெய்யக் கூடும். அவளுடைய சுற்றுச் செலவும் ஒரளவுபட்டதே. மறைவொழுக் கத்தைச் சமுதாயப் பெருங்கண்கள் பார்த்துக் கொண்டிாா, சுற்றுப் புறக் குளவிகள் கொட்டாது விடா எண்ணவூசிகள் துளையாது போகா, ஆதலின் காதற்களவுக்கு உலகில் புகலிடம் இல்லை. களவைக் கற்பாக்கினாலல்லது உலகுக்கு உறக்கம் இல்லை. 'மலர்ந்த வேங்கை மரநிழலில் தலைவனொடு ஒக்க இருந்து கதிர்தின்ன வந்த கிளிகளை இருவரும் எழுந்து ஒட்டி அருவியாடிச் சந்தனம் பூசி மகிழ்ந்த இன்பப் புணர்வுக்கு இனி வாய்ப்பு உண்டோ? தினைக்கதிர்கள் முற்றி விளைந்தன. வேட்டுவர் கொய்து செல்வர். ஆதலின் புனங்காவலைச் சாக்காக வைத்துத் தலைவனொடு அளவளாவுதல் இனிமேல் இயலாது' (நற். 259) என்று தோழி தலைவிக்கு அறிவிக்கின்றாள். தலைவனுக்கும் அது கேட்கின்றது. முற்றிய தினை களவொழுக்கத்திற்கு முதல் இடையூறாகும். தலைவி புனங்காத்தல் இல்லெனவே, பகற்காட்சியும் புணர்ச்சியும் இல்லையன்றே. பின்னர் இரவுக்குறிக்கு வழிசெய்க என்று தலைவன் தோழியைக் குறையுற்று நிற்ப்ான். இரவுக் களவின் தொடக்கத்துக் கூட்டத் தலைவி வீட்டின் புறத்து நடக்கும் என்றும், சிலநாளைக்குப்பின் அச்சம் ஒழிந்து உள்மனையிலும் சென்று களவு நிகழ்த்துவர் என்றும் நச்சினார்க்கினியர் குறிப்பிடுவர் (தொல். 1076). "மனையோர் கிளவி கேட்கும் வழி” என்பதனால், வீட்டின் றமாவது வீட்டார் பேசுவது கேட்கக்கூடிய அருகு என்பது ாய் இல்லம் வந்தார் யார்க்கும் விருந்தோம்புதல் றமரபு. மாலைப்போது கதவைச் சார்த்துவதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/68&oldid=1237184" இலிருந்து மீள்விக்கப்பட்டது