பக்கம்:தமிழ்க் காதல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை பாகுபாடு

55


முன் விருந்தினராய் வெளியில் நிற்பார் உண்டோ? எனக்கேட்டுச் சார்த்தல் பண்டைப் பழக்கமாம் (குறுந் 118), ஒரு சமுதாயத்தை அது நம்பும் பழக்க வழக்கங்களைக் கருவியாகக் கொண்டே ஏய்த்துவிட முடியும். ஆதலின் களவுத் தலைவன் தலைவியின் இல்லத்துக்கு மாலையிற் செல்லுதலும், அவள் தாய் அவனை விருந்தினன் எனக் கருதி முறையாக வரவேற்றலும் உண்டு. எனினும் ஒரு தாய்க்கு உறக்கம் வீரவில்லை. குமரி வாழும் வீட்டகத்துப் புதிய ஓர் இளைஞன் வருதலும், இரவில் தங்குதலும் அவளுக்கு ஐயத்தை உண்டாக்கின. தாயின் விழிப்பு இரவுப் புணர்ச்சிக்குத் தடையாயிற்று. எதிர் பார்த்தது நடவாமையின், மகளுக்கு ஒரே சினம். 'அரிதாக ஒரு நாள் நம் மகிழ்ச்சிக்கு உரிய விருந்தினன் வந்தான். பகைவன் வந்த ஊரினர்போல அன்னை தூங்கவில்லை. காதலர் தம் இன்பத்துக்குக் குறுக்காக நின்ற இவள் நரகத் துன்பம் என்றும் பெறுக’ பெண்கொலை புரிந்த நன்னன் போல வரையா நிரையத்துச் செலீஇயரே அன்னை ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனப் r பகைமுக ஊரிற் றுஞ்சலோ இலளே (குறுந். 292) எனப் பெண்ணாக ஈன்று குமரிவரை வளர்த்த தாயையும் மகள் சபிக்கக் காண்கின்றோம். பருவத் துணிச்சல் இது பெற்ற மகளைக் காவல் செய்யும் தாயைப் பெண் கொலை புரிந்த நன்னனோடு ஒப்பிடும்போது, இளம் பெண்ணின் ஆராக் காமவுணர்ச்சியையும், அதனால் வரும் வெகுளியுணர்ச்சியையும், அன்னையை நன்னனெனக் கருதும் வெறுப்புணர்ச்சியையும் உணர்ச்சி யுடையோர் புரிந்துகொள்ள முடிகின்றது. *:: காதலர்கள் காதலிக்கும் தொடக்கத்துத் தம்மை எதிர் நோக்கி யிருக்கும் துன்பத் தொகையைப் பற்றி அறியார். அதுபோல் துன்பமலையை இன்பக் கடலுக்குள் தூக்கி எறியும் வன்மை காதலுயிர்களுக்கு உண்டு என்பதையும் அறியார். காலப்போக்கு காதலின் பேராற்றலையும் வழி துறைகளையும் மெல்ல மெல்ல அன்னோர்க்குக் கற்றுக் கொடுக்கும். காதல் வெள்ளத்து மூழ்கிய ஆடவன் மத யானைகளையும் சுழித்தடித்துக் கொண்டோடும் காட்டாற்று வெள்ளத்தைப் பொருட்படுத்தாது குறுக்கே பாய்ந்து ஆண் பன்றி போல நீந்தித் தலைவியைக் காண நடுயாமத்துப் புறப்படுகிறான். இரவுக்குறியிடம் வந்து நிற்கிறான் (அகம்.18) கூர்த்த மதியுடைய் மடந்தை, முருகன் போலும் முன்சினம் கொள்ளும் தந்தை வீட்டில் இருப்பவும், காற் சிலம்பை ஒசையிடாதபடி கட்டிக்கொண்டு, ஏணிமேல் ஏறித் தோட்டத்து இறங்கி, மழை சோ எனப் பெய்யும் நள்ளிரவில், காதலன் அகலத்தைத் தழுவுகிறாள் (அகம்.158, 198) இதுபற்றிக் கேட்கும் செவிலிக்கும், நீ கண்டது கனவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/69&oldid=1237195" இலிருந்து மீள்விக்கப்பட்டது