பக்கம்:தமிழ்க் காதல்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

தமிழ்க் காதல்


புகைபோல நுழைந்து காணும் ஆசையும், Jis tą யிருந்து முணுமுணுத்துப் பேசும் துணிவும் எப்படியோ பெண் சமுதாயத்துக்குப் பிறவிக்குணம்போல் அமைந்துவிட்டன. ஒரு குமரியின் காதலொழுக்கம் பற்றி ஊர்மகளிர் வாய்க்குள் பேசிக்கொள்வது அம்பல் எனவும், வெளிப்படையாகப் பேசுவது அலர் எனவும் பெயர்பெறும். “அம்பல் முதும் அலர்வாய்ப் பெண்டிர்”(நற் 143) “அலர்வினை மேவல் அம்பற் பெண்டிர்” (அகம். 203) என இவ் வாய்ப்பட்டிகளை அகப்புலவர்கள் குறிப்பிடுவர். ஊரார் தூற்றும் அலரால் பல நலங்கள் உண்டு. 'மணங்கமழும் கடற் சோலையில் எங்கள் இன்பப் புணர்வைத் தடுத்து விட்டதே; நாள்தோறும் வந்த தேரை நிறுத்திவிட்டதே' (நற்.203) என்று தலைவி சில பலபோது அவரைப் பழித்தாலும், “எம் அன்னை என்னை வீட்டினுள் அடைத்து வைப்பதற்கு ஊர்வாயன்றோ காரணம்; இனி என் மாநிற அழகு வெண்ணிறப் பசலையாகிப் போகுமோ? (நற். 63) என்று ஊராரை வைதாலும், முடிவில் அலரின் நல்விளைவைத் தலைவியும் தோழியும் அறிந்தே யிருந்தனர். ஒருதாய் தன் மகளைச் சிறிது கடிந்துரைத்தாள். அது தெரிந்த முல்லைநிலப் பெண்டுகள் இவளுக்கு இவனோடு தொடர்பு உண்டு என அலர் தூற்றினர். இவ்வலர் கேட்ட தலைவி வருத்தப்படவில்லை. தன்னை அவனோடு சேர்த்துப் பேசப்பேச அவளுக்குப் பெருமகிழ்ச்சி. ஊருக்கு உண்மை தெரிந்தது என்றும், இனித் தன் வீட்டார் அவ்விடையனுக்கே தன்னை மணப்பிப்பர் என்றும், கற்புக்கு ஊறு இல்லை என்றும் நன்முறையில் அலரை மதிக்கின்றாள். ஒண்னுதால், - இன்ன உவகை பிறிதியாது யாயென்னைக் கண்ணுடைக்கோலள் அலைத்ததற் கென்னை மலரணி கண்ணிப் பொதுவனோ டெண்ணி அலர்செய்து விட்டதில் ஆர். (கலி. 105) இனி அலரைத் தவிர்க்கமுடியாது, ஊர் வாயை மூட முடியாது என்ற எண்ணத்தால், காதலர்களுக்குத் திருமண நினைவு பெருகுகின்றது. மணப்பது உறுதி என்ற துணிவாலும், இனிமேல் களவொழுக்கம் கிடைக்கப்பெறாது என்ற நசையாலும் சில ஆடவர்களுக்குக் களவின்பத்தை நீடிக்கும் மனப்பாங்கு வருதல் உண்டு. "மாணா ஊர் அம்பல் அலரின் அலர்கென, நானும் நிறையும் நயப்பில் பிறப்பிலி' (கலி. 60) என்ற பாட்டால், அலருக்கு நாணாத ஆண் பிறப்புக்களை அறியலாம்.முகிழ்முகிழ்த்த அம்பல் இன்னும் விரிந்து மலர்போல மலரட்டுமே என்று ஒரு தலைவன் துணிவாகப் பேசுகின்றான். எனினும் இவ்வகைத் துணிவு நாண்பிறப்பு எனத்தக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/76&oldid=1238337" இலிருந்து மீள்விக்கப்பட்டது