பக்கம்:தமிழ்க் காதல்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை பாகுபாடு

63


பெண்பிறப்புக்கு வருவதில்லை. துணையெனத் தொழுத தெய்வமே அன்பனுக்குக் கொடுமை செய்தது என்னுமாப் போல, காதலனாகிய நீ காதலிக்குக் கொடியவனாகின்றாய். உன்னால் அவளுக்குப் பழிதோன்றவும் அலர் பரவவும் மனம் அலையவும் காண்கின்றேன். இனியேனும் வரைந்து ஆட்கொள்’ என்று தலைவன் நாணுமாறு தோழி இடித்துரைக்கின்றாள்: வழிபட்ட தெய்வந்தான் வலியெனச் சார்ந்தார்கண் கழியுநோய் கைம்மிக அணங்காகி யதுபோலப் பழிபரந் தலர்துாற்ற என்தோழி அழிபடர் அலைப்ப அகறலோ கொடிதே. (கலி. 132) ஊரலரை மிக வெறுக்கும் ஒர் ஐந்திணைப் பாத்திரம் தலைவியின் தாயே (அல்லது தலைவியை வளர்த்த செவிலியே). எவ்வகையானும் அம்பலையோ அலரையோ அவள் விரும்பு வதில்லை. தன் குடும்பத்தைப் பற்றிப் பேசுதற்கு இவர் யார்? தன் மகள் நடத்தைபற்றி வாயெடுத்ததற்கு ஊரார்க்கு என்ன உரிமை யுண்டு?” என்றெல்லாம் தாய் மனம் கொதிக்கின்றது. கெளவை மேவல ராகி இவ்வூர் நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ புரைய அல்லவென் மகட்கு (அகம். 95) ஊர் கூறும் அலர் என்மகளுக்குப் பொருந்துமோ? என்று சொல்லும் போது, தாயின் குடிப் பெருமிதத்தையும் என் மகள் மேல் இடுதேளிட்டாற்போல் பழிபரப்பும் இவ்வூர்ப் பெண்டுகள் இவ்வுலகப் பெண்டுகள் இல்லை, நரகப் பெண்டுகள் என்று சொல்லும்போது, தாயின் ஆறாச் சினத்தையும் நாம் புரிந்து கொள்கின்றோம். குடிப்பெருமைக்குக் கேடு வருங்கால், வெகுளி பிறக்கும் என்பர் தொல்காப்பியர். அத்தகைய வெகுளித் தாயர்களை அலர்த்துறைபற்றிய பாடல்களில் காணலாம். தன் மகள் களவொழுக்கத்தைத் தாயே ஒரு நாள் தெரிந்து கொள்வாள் என்று சும்மா இராமல் ("யாய் அறிந்து உணர என்னார்’) என் வீட்டுப்படியேறி வந்து என்னிடமே பலகாலும் குறைசொல்லும் இவ்வூர் மாதர்கள் நல்ல வாயும் குடும்பத் தொழிலும் உடையவர்கள் இல்லை; “தீவாய் அலர்வினை மேவல் அம்பற் பெண்டிர் (அகம்.203) என்று பெற்ற மனம் பித்தாக ஒருதாய் வசை பொழிகின்றாள். பெதும்பைப் பருவ மகளைப் புறத்தே போகவிடாள்,கோல்கொண்டு அலைப்பாள், இரவு பகலெல்லாம் கண்காணிப்பாள் என்று தாயின் செய்திகளை அகவிலக்கியத்துப் படிக்கின்றோம். படிப்பார்க்கும் தலைவிக்கும் தோழிக்கும் தலைவனுக்கும் அன்னை கொடிய வளாகவும் காதலுக்குப் பகைத்தி ஆகவும் தோற்றம் தந்தாலும் இளமை வேகத்தால், தன் பழங்குடி ஒழுக்கவடுப்படுதல் கூடாது, ஊர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/77&oldid=1238338" இலிருந்து மீள்விக்கப்பட்டது