பக்கம்:தமிழ்க் காதல்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

தமிழ்க் காதல்


வேண்டும். நச்சினார்க் கினியர் கூறுவதுபோல, நொதுமலர் வரைவு வெறியாட்டெடுத்தல் முதலான அரியபெரிய தொல்லைக் காலத்தன்றித்தலைவி நாண்விட்டு அறத்தொடு நிற்பதை விரும்பாள். 'தலைவன் என் மெய்யைத் தடவித் தலையளி செய்தான். அவன் என்னை மணப்பது தவறுமாயின், நம் குடிக்கு வடுவாகும். என் செய்வது? தோழி, இன்னது செய்தாள் இவளென மன்னா உலகத்து மன்னுவது புரைமே (கலி, 54) என வேற்று வரைவுக்கு மனமுரசு கேட்ட தீய அமையத்து, கற்புடை நல்லாள் தாய்க்கு அறத்தொடு நிற்கவேண்டும் குறிப்பைத் தோழிக்கு மொழிதல் அறியத்தகும். § இன்னது செய்தாள் இவள் எனத் தலைமகள் தன் களவை வெளிப் படையாகச் சொல்லப் பணிக்குங்கால் கற்புக்கு நாண் பலியாதல் காண்க. அறத்தொடு நிற்றல் என்ற நுண்துறை பற்றி 51 செய்யுட்கள் சங்கவிலக்கியத்து உள்ளன. கூறுபாடுகளையெல்லாம் விளக்கும் வனப்பு நிலையில் சில செய்யுட்கள் அமைந்துள்ளன. நுண் துறையென்று இத்துறையைச் சுட்டினேன். ஏனெனின், அறத்தொடு நிற்றல் முற்கூறியாங்கு சில சூழ்நிலைகளுக்கு உட்பட்டது என்பது ஒரு புறம் இருப்ப, நிற்கும் முறையிலும் ஏணிபோலச் சில மனநிலைகளை யுடையது. களவொழுக்கத்தை யார்க்கு யார் வெளிப்படுத்தலாம்? தோழியும் அறியாது மறைந்தொழுகிய தலைவி தன் களவை அவளுக்குக் கூறி அறத்தொடு நிற்பள். பின்னர்த் தோழி தன் தாயாகிய செவிலிக்கும், செவிலி தலைவியின் தாயான நற்றாய்க்கும் களவைக் கூறுவர். இதுவே வயதுக்கும் உறவுக்கும் ஒத்த முறையாகும். நற்றாயோ தலைவியின் தந்தைக்கும் உடன் பிறந்தோர்க்கும் சொல்லாற் கூறாது அவர்கள் அறிந்து கொள்ளுமாறு குறிப்பால் தெரிவிப்பாள். "தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணர்ப” (தொல். 1082) என்னும் உளநயம் நினையத் தகும். தலைவி தோழி செவிலி நற்றாய் நால்வரும் பெண்பாலார் ஆதலின் சொல்லால் சொல்லிக் கொள்ளலாம் எனவும், தந்தையும் அண்ணனும் நெருங்கிய கேளிரேனும் ஆண்பாலார் ஆதலின் ஒரு குமரியின் களவினைக் குறிப்பினால் உணரச் செய்தல் நல்லது எனவும் அகத்தினையிலக்கணம் மனப்படிகள் வகுத்துக் காட்டும். சங்கப் பெரும் புலவர் கபிலர் ஐம்பத்தோரடிக் கலிப்பாட்டில் (கலி. 39). அறத்தொடு நிலையை நிகழ்ச்சி முறையால் வைத்துச் சிறுகதைபோல் வேகமாகச் சொல்விச் செல்வர். அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய் என நிற்குமுறையினையும் சுட்டிக் காட்டுவர். ஐந்திணைக் களவுத்

  1. .
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/84&oldid=1238334" இலிருந்து மீள்விக்கப்பட்டது