பக்கம்:தமிழ்க் காதல்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை பாகுபாடு

71


தமிழ்மொழியின் தனியிலக்கிய மதிப்பை அறிவுறித்த விரும்பிய கபிலர் அறத்தொடு நிற்றல் என்னும் துறையில் 26 அடிகள் கொண்ட குறிஞ்சிப் பாட்டை யாத்தார். - உடன் போக்கு படிகடவா இளமங்கை பிறந்த வீட்டைத் துறந்து பெற்றோரை மறந்து முன்பின் அறியா ஆடவனைக் காதற் கொழுநன் என நம்பிக் கரடுமுரடான வழியில் உடன் போக்குத் துணிந்தபோது, அகவிலக்கியம் புதினம்போலும் சாயலையும் விறுவிறுப்பையும் பெறுகின்றது. கற்பவருக்கும் உணர்ச்சிக் கூர்மையை விளைக்கின்றது. உடன் போக்கு எப்பொழுது நிகழும்? அறத்தொடு நின்ற பின்னும், எண்ணிய காதலனுக்குப் பெற்றோர் மணம் முடிக்க மறுத்தராயின், இவ்வழிச் செலவு நிகழும் என்று கொள்ளலாமா? கூடாது. அறநிற்புக்குப்பின் பெற்றோர் மறுக்கார், மகள் கற்பிழுக்குப்பட நடவார்; உரியவனுக்கே மணஞ் செய்வர், ஆதலின் உடன் போக்குக்கு இடமில்லை. இற்செறிப்பு, ஊரலர், வெறியாட்டு, நொதுமலர் வரைவு என்ற இன்னாச் சூழ்நிலைகளைக் கடத்தற்கு இரண்டு வழிகள் உள.ஒன்று அறத்தொடு நிற்கை ஏனையது உடன் போகுகை இவற்றுள் ஒன்று நிகழின் மற்றொன்று நிகழாது. அறத்தொடு நின்ற பின் உடன் போகார். உடன்போயபின் அறத்தொடு நிற்பதாற் பயனில்லை. இரண்டில் ஒன்றே களவு நாடகத்தின் இறுதிக் காட்சியாகும் என்று தெளிக. களவுத் தொடர்பை எனக்கு அறிவித்திருந்தால் சுற்றம் சூழ அவனுக்கே நன்மணம் செய்வேனே, அவனோடு உடன் போக்கு அவளுக்குத் திருமணத்தினும் இனிதாயிற்றுப் போலும்: . . தன்னமர் ஆயமொடு நன்மன நுகர்ச்சியின் இனிதாங் கொல்லோ தனக்கே பனிவரை இனக்களிறு வழங்குஞ் சோலை வயக்குறு வெள்வே லவற்புணர்ந்து செலவே (ஐங், 379) என்று நற்றாய் தன் மகள் உடன்போயதை அறிவித்த தோழியிடம் நொந்து கொள்கின்றாள். முன்னரே அறத்தொடு நின்றிருந்தால் உடன்போக வேண்டியதில்லையே எனப் பரிந்து பேசுகின்றாள். உடன் போக்கினைத் தலைவன் எளிதாக நாடுவதில்லை! கிடைத்தற்கரிய களவுப்புணர்ச்சி என்னும் துணிவுப் புணர்ச்சியைச் சில நாளில் முடித்துக்கொள்ள விழைவதில்லை. களவினிற் பலநாள் ஒழுகி இன்புற்றபின்னரே, இயல்பு புணர்ச்சி என்னும் வரைவுப் புணர்ச்சியை மேற்கொள்வான் (ஐங். 6) தோழியின் மனப்பாங்கு வேறு.தலைவன் தலைவி இருவர்தம் உள்ளோட்டங்களையும் ஊரின் புறவோட்டங்களையும் கணித்தறிந்த தோழி இனிக் களவு நீளாது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/85&oldid=1238335" இலிருந்து மீள்விக்கப்பட்டது