பக்கம்:தமிழ்க் காதல்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

தமிழ்க் காதல்


ஊரலர் தாங்காது, பெற்றோர்க்கும் உணர்த்த இயலாது, உடன் போக்கே வழி எனக் காதலரை நெறிப்படுத்துவாள். அறத்தொடு நிற்கப் பெற்றோர்க்கு முன்னின்று சொல்லும் துணிவுவேண்டும், இவ் வகைத் துணிவு இளம்பெண்மக்கள் பால் எதிர்பார்த்தற்கில்லை. அன்னை வாய் என்ன சொல்லுமோ? முகம் என்ன காட்டுமோ என்று பேதை மனம் பித்துக்கொள்ளும். 'நீ சின்னஞ் சிறுமியா? பேதைநிலை கடந்து பெதும்பைப் பருவம் எய்திய நீ, வாயில் தாண்டிப் புறத்தே செல்லலாமா? எனக் கடிந்தேன். எங்கே தாய் தன் களவைத் தெரிந்து கொண்டாளோ என்று எனக்கு அஞ்சி வீட்டை விட்டுக் காட்டுவழிப் புறப்பட்டாள் (அகம், 7) இவ்வாறு உடன் போய ஒரு தலைவியின் செவிலித் தாய் இவளுக்கேன் இவ்வச்சம் என்று கவலைகொள்ளக் காண்கின்றோம். அயலோர் மனம்பேச வந்த காலத்துத் தலைவியும் தோழியும் அதனை விலக்கத் தவறிவிட்டனர். பின்னர் அறத்தொடு நின்று களவை வெளிப்படுத்தவும் பின்வாங்கினர். இந்நிலையில் அல்லவன் ஒருத்தனுக்கு மகளை மணவினை காணப் பெற்றோர் ஏற்பாடு செய்ததில் என்ன குற்றம்? மகிழ்ச்சியோடு வீட்டிடத்தை வனப்புச் செய்து முற்றத்தும் புதுமணல் பரப்பினர். நிலை கைகடந்து சென்றதை அறிந்தாள் தோழி. தலைமகனுக்கும் அறிவித்தாள். ஊரைவிட்டு உடன்போதலே வழி என்று அவன் சொல்லிய துணிச்சலான கருத்து அவள் அறிவிற்கும் சரியெனப்பட்டது. நனைவிளை நறவின் தேறல் மாந்திப் புனைவினை நல்லில் தருமணற் குவைஇப் பொம்மல் ஒதி எம்மகள் மணனென வதுவை அயர்ந்தனர் நமரே அதனால் புதுவது புனைந்து செயலை வெள்வேல் மதியுடன் பட்ட மையணற் காளை. அருஞ்சுரம் சேறல் அயர்ந்தனென் யானே (அகம். 221) என்று தோழி தலைமகட்கும் உடன் போக்கை மேற்கொள்ளுமாறு வலியுறத்துவள். களவொழுக்கத்துக்கு அஞ்சாத தலைவியும் தோழியும் நொதுமலர் வரைவுக் காலத்துப் பெற்றோர்க்கு நடுங்குவர் என்பதும், இந் நடுக்கமே உடன் போக்கிற்குப் பெருங்காரணம் என்பதும் இதனால் அறியலாம். பெண் மக்களின் ஒழுக்கத்துக்குக் காப்பாளி பெற்ற தாயே. யாதும் தவறு நேரின், 'இவள் வளர்த்த அழகு இது என்று ஊரார் தாய்மேல் பழிசுமத்தக் காணலாம். அது கேட்டு அன்னை நானுவாளேயன்றிப் பொறுப்புத் தனக்கில்லையென்று தட்டிக் ாள். களவுக் குமரி பெற்றோரை அஞ்சுவாள் எனத் யையும் உளப்படுத்திப் பொதுவாகச் சொல்லினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/86&oldid=1238344" இலிருந்து மீள்விக்கப்பட்டது