பக்கம்:தமிழ்க் காதல்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை பாகுபாடு

73


ஈன்றவளையே சிறப்பாகக் குறிக்கும். ஊர்மாதர்கள் இன்னவள் மகள் என்று தாயைச் சுட்டி மகளைச் சுட்டுவதுதான் நம் சமுதாய மரபு. தாய் பெயரை இழுத்தும் அவட்குமுன் வந்தும் ஊரினர் அலர் கூறுவராதலின், மகள் களவொழுக்கத்தால் மனங்கசப்பவளும் கொதிப்பவளும் ஈன்றாளே. உடன் போக்குத் துறைபற்றிய பாடல்களைத் தொகுத்துவைத்து நோக்கின் அப்போக்குக்குக் காரணள், தாய் என்பது தெளிவாம். “அழுங்கல் முதுார் அலர்எழச் செழும்பல் குன்றம் இறந்த என்மகளே (ஐங், 372) என ஒர் அன்னை அலரச்சத்தால் தன்மகள் உடன் போகலாயிற்று என்று குற்றம் பகரினும், அலர்கேட்டு அன்னை சீறுவாள் என்ற தாயச்சமே முடிந்த காரணம் என உய்த்துணரப்படும். ஊஉர் அலரெழச் சேரி கல்லென ஆனா தலைக்கும் அறனில் அன்னை தானே இருக்க தன்மனை யானே நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க உணலாய்ந் திசினால் அவரொடு சேய்நாட்டு விண்தொட நிவந்த விலங்குமலைக் கவாஅன் கரும்புநடு பாத்தி யன்ன - பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே. (குறந். 262) காதற் சுழிப்பட்ட குமரிக்கு வரும் துணிவுகளைப் பாருங்கள். வயாவும் வருத்தமும் பட்டுத் தள்ளமுடியாத பொருளாகச் சுமந்து ஈன்று பால் நினைந்து ஊட்டிப் பருவம்வரை காத்த அன்னை இன்று அறனில்லாதவளாம்; அவள் உரக்கச் சொல்வது அலைத்தலாம்; தன் ஒழுக்கத்தால் அன்றி, அவள் அலைத்தலால் ஊரில் அலர் பரவுகின்றதாம்; இதுவரையில் வாழ்ந்தமனை இனி அன்னையின் தன்மனையாம்; இதுகாறும் தன்னால் மகிழ்ச்சியோடிருந்த அன்னை இனி தானே தனித்து வருந்தியிருக்கட்டுமாம்; தாயோடு வீட்டிலிருப்பின் நல்ல நீரும் நல்ல காய்கனிகளும் கிடைக்கு மாயினும், வேண்டாவாம்; காதலனோடு மலைவழிச் சென்று நெல்லிக்காயைத் தின்று கலங்கிய நீரைக் குடித்து மகிழ்வாளாம். மிகுந்த செய்ந் நன்றிக்கு உரிய தாயை இவ்வாறு மிக அஞ்சி வெறுத்து ஒரு தலைவி மனமாறி உடன்போகத் துணிகின்றாள். இது வேண்டாத அச்சமாகும். தாய்க்கு உண்மையை உணர்த்தாது அவளைக் கொடியவள் என்று கடிவது பொருந்துமா? உண்மையை அறிந்தபின், தாய் துறக்கத் தக்கவளாக நடந்தாளா? இல்லை என்பதே இலக்கிய விடை - மகள் காதலனுடன் ஏகியபின், அன்னைபடும் ஆற்றாமை யையும் அன்பையும் கபிலர் ஒரு செய்யுளில் புதுவனப்போடு புலப்படுத்துகிறார். ஊர்மக்கள் இடைவிடாது அலர்வந்து சொல்லவும், அதனை மகளுக்குத் தாய் சொல்ல நி ைனக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/87&oldid=1238371" இலிருந்து மீள்விக்கப்பட்டது