உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 103

அடகு தின்று உயிர் வாழ்கின்று ரென்பதோர் பொருள் தோன்ற நின்றது என்று குறித்தார்.'

இது, அகப்பொருள் நூலிற் கூறப்படும் உள்ளுறை யோடு ஒப்புமை பெறுதல் காண்க. இதைப்பற்றி மகா மகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் குறித்துள்ள, "அகப்பொருட் செய்யுட்களுக்கு உரை வகுக்கும் உரையாசிரியர்கள் உள்ளுறையுவமமாகவும், இறைச்சிப் பொருளாகவும் அறிந்து கூறும் பொருளைப் போன்று பாட்டிற் காணப்படும் இன்ன சொற்களின் குறிப்பினுல் இன்ன பொருள் தோற்றுகின்றதென்றும், இன்ன நயம் புலப்படுகின்ற தென்றும் இவர் எழுதிச் செல்லும் இடங்கள் மிக்க இன்பத்தை உண்டாக்கும்' என்ற கருத்தும் இங்கே அறிதற் குரியது.

புறநானூற்று உரையாசிரியர் இங்ங்னம் அமைக் கும் குறிப்பும், அகப்பொருட் செய்யுளில் வரும் உள்ளுறை யுவமமும் இறைச்சியும், பிற்கால அணியிலக்கணத்தில் வரும் கருத்துடையணி கருத்துடையடைகொளியணி யென்பனவும், வடமொழியில் த்வன்யாலோகம் முதலிய நூல்களில் விரித்துக் கூறப்படும் தொனியும் ஓரினப்படு வனவென்று கொள்ளுதல் ஏற்புடையதாகும்.'

1. புறதச. 143, 145, 200, 202 என்னும் செய்யுட்களின் உரையை பும் பார்க்க. -

2. புறதா. 3-ஆம் பதிப்பு, உரையின் இயல்பு, ப. 85.

3. இங்ங்னம் பலவாரு கத் தோன்றும் தொனி வகைகளே எண்ணித் தனிமையில் பேதமும், சேர்க்கையில் பேதமும், சேர்க்கைக் கலவியில் பேத மும் உண்டென்று தொனி நூ லுடையசர் கூறுகின்றனர். இத்தொனி வகை களெல்லாம் அகப்பாட்டும் புறப்பாட்டுமாகிய சங்கமருவிய நூல்களிலும் சான்ருேர் செய்யுட்களிலும் இடையிடையே விரவி வரப்பெறுவன. இவை பெரும்பாலும் இறைச்சிப் பொருள்பற்றியும், திருப்பாவை, திருவிருத்தம், திருவாய்மொழி முதலிய திவ்யப் பிரபந்தங்களில் ஸ்வாபதேசப் பொருள் பற்றியும் வருவன.--திருநாராயணயங்கார்: காவியம்: செத் தமிழ், தொகுதி, 10, ப. 268.