உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 - தமிழ்க் காப்பியங்கள்

மெய்ப்பாட்டியல் இனி மெய்ப்பாட்டியலில் அமைந்த செய்திகளை ஆராய்வோம். தொல்காப்பியர் காலத்திலே தமிழ் நாட் டில் மெய்ப்பாடுபற்றிய செய்திகள் நூல் வழக்கில் இருந் தனவென்று தெரிகின்றது. மெய்ப்பாடு என்பதற்குப் பொருட்பாடு என்று பொருள் கூறுவர். அதாவது, மக்களின் உள்ளத்தில் நிகழும் நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோராற்ருன் வெளிப்படுதல். -

தொல்காப்பியத்தில் கூறப்பட்ட மெய்ப்பாடுகள் வட நூலுள் கூறப்படும் ரஸம், பாவம் என்னும் இருவகையுள் அடங்கும். இவற்றைத் தமிழில் முறையே சுவை, குறிப்பு எனக் கூறுவர். ரஸ்மாவது பாவங்களிளுல் கண்டோரும் கேட்டோரும் நுகரும் இன்பம். இது நாடகத்திலும் காப் பியத்திலும் வெளிப்படுவது நாடகத்தைக் கண்டோர் அதில் நடிப்பவர்களுடைய பேச்சு ,செய்கை, மெய்ப்பாடு என்பவற்றை உணர்ந்து இன்பத்தை அட்ைகின்றனர். அவ்வாறே காப்பியத்தைப் படிப்போரும் அடைகின்ற னர். இந்த இன்ப உணர்ச்சியையே சுவையென்பர். மெய்ப்பாடுகளைச் சில இடங்களிற் சுவையெனவும் சில இடங்களிற் குறிப்பென்வும் கொள்ளவேண்டும். இவற் றைச் சுவையெனவும் குறிப்பெனவும் வழங்கினும் அமையும்' என்று பேராசிரியர் கூறுவது காண்க.

வடமொழியிற் சுவையைப்பற்றியும் பாவங்களைப் பற்றியும் இலக்கணம் அமைக்கும் நூல்கள்மிகப் பல.அலங் கார நூல்களில் சுவையை முதலில் ஏனைய அணிகளோடு வைத்துக் கூறிப் போந்தவர் பலர். நாளடைவில் சுவையே

. தொல், மெய்ப்பாடு. 3, உரை.