உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 தமிழ்க் ಹrbತಿuಸಿಹir

களையே பலபடியாக விரித்துக் கூறுகின்றனர். அகத்திணை யியலில் அச்சுவைக்குரிய பல பாவங்களும், மெய்ப்பாட் டியலில் புணர்ச்சிக்கு முன்னும் அதன் பின்னும் நிகழும் மெய்ப்பாடுகளும் சொல்லப்படுகின்றன. இவற்ருல் ஏனைச் சுவைகளுள்ளும் சிருங்காரச் சுவையே தலைமை யுடையதென்பது புலகிைன்றது. உவகையை ஈற்றுக் கண் வைத்ததற்குக் காரணம் கூறவந்த பேராசிரியர், "எல்லாவற்றினும் ஈண்டு ஒதுதற்குச் சிறந்ததாக லானும்' என்பர். எல்லா ரஸங்களும் சிருங்கார ரஸத்தி லிருந்தே பிறப்பனவென்று போஜராஜன் இயற்றிய சிருங்காரப் பிரகாசம் முதலிய நூல்கள் கூறும். பரிமேலழகர், -

"இச் சிறப்புப்பற்றி வடநூலுட் போசராசனும் சுவை பலவென்று கூறுவார் கூறுக, யாம் கூறுவது இன்பச் சுவை ஒன்றனையுமே யென இதனையே மிகுத்துக் கூறினன்' * என்று கூறுதலும் காண்க. வீரசோழிய உரையாசிரியர் சுவையைக் குறிக்கும் மெய்ப்பாடுகளைப் புற மெய்ப் பாடுகள் எனக் குறித்து, அவை எட்டென்றும் அவ் வெட்டும் சிருங்காரத்தினின்று பிறப்பன வென்றும் தெரிவிக்கும் சூத்திரம் இரண்டை எடுத்துக் காட்டினர்.

'புறமெய்ப் பாடே திறனுளிப் புகலின்

ஆரணங் காயவக் காமந் தானே காரணம் பற்றிக் கருத்து வேறுபட்டு மற்றுமோ ரேழாய் மெய்க்கண் டதளுெடும் எட்டா மென்பர் இயல்புணர்ந் தோரே' :அவைதாம், நற்சிருங் காரம் நகையே வியப்பே

அச்சம் வீரம் உட்கோள் இரக்கம்

1. தொல். மெய்ப்பாடு. 3. பேர் 2. திருக்குறள், காமத்துப்பால், அவதாரிகை.