உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 115。

இழிப்பெனத் தோன்றின. இவை அவை தாமே முப்பத் திரண்டென மொழிந்தனர் கண்டே."

இவை எந்த நூலில் உள்ளனவோ தெரியவில்லை. வட மொழியில் அக்கினி புராணக்காரர், ருத்திரபட்டர் (சிருங் கார திலகம்) ஆதியோர் சிருங்காரமே தலைமைச் சுவை யென்பர். சீவகசிந்தாமணி யாசிரியர், "காப்பியக் கவிகள் காம வெரியெழ விகற்பித்திட்டார்' என்று குறை கூறும் வாயிலாக, காப்பிய இலக்கியங்களில் இச்சுவை தலைமை பெற்றுப் பல விகற்பங்களோடு நிலவுவதைத் தெரிந்து புலப்படுத்தினர்.

சிருங்கார வகை

இந்தச் சிருங்காரம் இரண்டு பகுதிப்படும்; சம்போக சிருங்காரம், விப்ரலம்ப சிருங்காரம் என்பன அவை. இவ் விரண்டு வகைகளோடும் தொடர்புடைய விஷயங்களே தொல்காப்பியத்தில் களவியல், கற்பியல் என்ற பகுதி களில் கூறப்படுகின்றன. அவை இச்சுவையின் தொடர் புடையன வென்பது தொல்காப்பியரால் கூறப்படவில்லை. யெனினும், அவர் அமைத்த முறையும் செய்திகளும் இதனுள் அடங்குவனவே ஆகும்.

பரிமேலழகர் திருக்குறட் காமத்துப் பாலில்,

'இது புணர்ச்சி பிரிவென இருவகைப்படும். ஏனை இருத்தல், இரங்கல், ஊடல் என்பனவோ வெனின், இவர் பொருட்பாகுபாட்டினை அறம் பொருள் இன்பம் என வட நூல் வழக்குப்பற்றி ஓதுதலான், அவ்வாறே அவற்றைப் பிரிவின்கண் அடக்கினர் என்க. இனி அவை தம்மையே தமிழ் நூல்களோடும்.

1. சிருங்காரோ நாயகோ ரஸ் :-சிருங்கார திலகம், 1 : 20.