உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 தமிழ்க் காப்பியங்கள்

பொருந்தப் புணர்ச்சியைக் களவென்றும் பிரிவைக் கற்பென்றும் பெரும்பான்மைபற்றி வகுத்து, அவற். றைச் சுவை மிகுதி பயப்ப உலக நடையோடும் ஒப்பும் ஒவ்வாமையும் உடையவாக்கிக் கூறுகின்ருர் என்று எழுதும் அவதாரிகையில்ை இக்கருத்து வலியுறும். மெய்ப்பாடு, உவமை முதலியவற்றைப்பற்றித் தொல்காப்பியர் கூறினும், அணியிலக்கணம் என்ப தொன்று பழங்காலத்தில் தமிழில் இல்லை. வடமொழி யிலுங்கூட உவமை முதலியன வேதம் முதலிய பழைய நூல்களிலே இலக்கிய உருவிற் பயின்று வரினும் அலங் காரத்தை வரையறுக்கும் இலக்கணம் பிற்காலத்தேதான் தோற்றியதென்று அறிஞர்கள் கூறுகின்றனர். கி. மு. இரண்டாம் நூற்ருண்டுக்குப் பின் எழுந்த நூல்களிலே தான் அலங்காரத்தைப்பற்றிய குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன வென்றும், முறையாக அலங்கார இலக். கணத்தை ஆராயும் ஆராய்ச்சி கி. பி 4, 5-ஆம் நூற்ருண்டுகளிலிருந்தே விரிவடைந்ததென்றும் வட நூலறிஞர் வகுக்கின்றனர். - அக்கால முதல் குண அலங்காரங்களைப்பற்றியும், சொற்பொருள் அணிகளைப்பற்றியும், சுவையைப்பற்றி: யும், தொனியைப்பற்றியும் பலபடியாகக் கூறும் அணி யிலக்கணங்கள் வடமொழியிற் பல்கின. செய்யுள் நெறியே தலைமையுடையதென்பாரும், அணிகளே காப்பியத்துக்கு அழகு பயப்பனவென்பாரும், சுவையே காப்பியத்தின் உயிர் என்பாரும், தொனியே காப்பியத் துக்கு ஒளி தருவதென்பாருமாக நாளடைவில் வடநூல் அணியிலக்கண ஆசிரியர்கள் பலதிறப்பட்டனர். இவர் களுக்குப் பல நூற்ருண்டுகளுக்கு முன்னரே எழுந்த தொல்காப்பியம், உவமையைப்பற்றியும், மெய்ப்

1. History of Sanskrit Poetics, Vol. I, p. 17.