உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 - தமிழ்க் காப்பியங்கள்

நான்கு வகைப்படும். இவற்றுள்ளே கூறப்படுவதாகிய நாடகமே கதை தழுவி வரும் கூத்தாகும்.

வென்றிக் கூத்தென்பது பகைவனது ஒடுக்கத்தை யும் தலைவனது உயர்ச்சியையும் மேம்படுத்துக் கூறுவது. இதற்குரிய இலக்கியம் நாடகக் காப்பியங்களில் ஒரு வகையாகும்; . -

"அவற்றுள், மாற்றன் ஒடுக்கமும் மன்னன் உயர்ச்சியும்

மேற்படக் கூறும் வென்றிக் கூத்தே."

வசைக் கூத்து, பல்வகை உருவமும் பழித்துக் காட்டும்.

நாடக உறுப்புக்கள் х

. இனி, நாடகத்திற்கு உறுப்பாக விலக்கு என்னும் தலைப்பில் பதின்ைகு பிரிவுகளைக் கூறுவர். அவை பொருள். யோனி, விருத்தி, சந்தி, சுவை, சாதி, குறிப்பு, சத்துவம், அவிநயம், சொல், சொல்வகை, வண்ணம், வரி..சேதம் என்பன. - - .

பொருளென்பது அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்குமாகும். இவற்றைச் சதுர்வர்க்கமென்பர் வடநூலார். இவற்றில் ஒன்றும் பலவும் பிரிந்தும் கூடியும் வருவன வுள. அவை நாடகம், பிரகரணப் பிரகரணம், பிரகரணம், அங்கம் எனப் பெயர்படும்.

நாற்பொருள் அமைதி இவற்றுள் நாடக மென்பது அறம் முதலிய நாற் பொருளையும் பயப்பக் கூறுவது, காப்பியங்களிலும் இவ் வறம் முதலிய நான்கும் கூறப்படுதல் வேண்டும். தொல் காப்பியனுர் கூறிய தொன்மை,விழுமிய பொருளாகிய இந்

1. சில ப், ப. 3i, - -