உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 119

திசையோன் வக்கிரித் திட்டதை உணர்ந்தாங் கசையா மரபின் அதுபட வைத்து ーっ மாற்ருேர் செய்த வசைமொழி அறிந்து நரத்தொலை வில்லா தன்னுற் புலவன்'

என்பதில் உணர்த்தினர்.

அக் கவிஞன் மூன்று தமிழும் முற்றக் கற்றவளுக இருக்கவேண்டும். இசையோடு சேர்த்தற்குரிய செய்கை களில் நல்லறிவுடையளுதல் வேண்டும். தலைவனைப் பழித்துப் பகைவர் அமைத்த வசைகளிற் காணப்பட்ட வற்றை யெல்லாம் மறைத்து, வசையில்லாத மொழி களால் நாடகத்தை இயற்ற வேண்டும்.

“இன்னே னல்லன் செய்குவன் ஆயின்

தேற்ரு மாந்தர் ஆரியம் போலக் கேட்டார்க் கெல்லாம் பெருநகை தருமே”

என்னும் சூத்திரம், இவ்விலக்கணம் அமையாத கவிஞன்

நாடகம் இயற்றுதல் நகைக்கு ஏதுவாகும் என்பதை உணர்த்துகின்றது.

- -ಕಿಶು வகை

அடத்துக்கள் பலவகைப்படும். அவற்றுள் இரண்டு இரண்டாகப் பகுக்கப்படுவன உள. அவை வசைக் கூத்து, புகழ்க் கூத்து, வேத்தியல், பொதுவியல், வரிக் கூத்து, வரிச் சாந்திக் கூத்து, சாந்திக் கூத்து, விநோ தக் கூத்து; ஆரியம், தமிழ், இயல்புக் கூத்து, தேசிக் கூத்து என்பன வாகும். -

இவற்றுள், சாந்திக் கூத்து என்பது சொக்க நிருத் தம், மெய்க்கூத்து, அவிநயக் கூத்து, நாடகம் என்று

1. சிலப்பதிகாரம், 3. 37-44,