உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 139.

முன்னிலைக்கண் வரும் கடவுள் வாழ்த்துக்களில் ஒரு வகை, தேவபாணியாகும்; அதனைப்பற்றி அடியார்க்கு. நல்லார் பின்வருமாறு கூறுகின்ருர் :

"அது முத்தமிழ்க்கும் பொது. அஃது இயற்றமிழில் வருங்கால் கொச்சக ஒரு போகாய் வரும். வரும் வழியும் பெருந்தேவபவாணி, சிறு தேவபாணி என இரு வகைத்தாய் வரும்.'

பின்னும் அது முன்னிலையில் வருமென்றும், இசைத். தமிழில் வருமாறு இன்னதென்றும், நாடகத் தமிழில் இன்ன இன்ன தெய்வத்தைக் குறித்து வருமென்றும் விரித்துக் கூறுகின்ருர். இவற்ருல், கடவுளை முன்னிலைப் படுத்தித் துதிக்கும் மரபு உண்டென்பதை அறிகின்ருேம்.

"அத் தொடர்நிலையின் முதற்கண் நின்ற தேவ பாணி' எனப் பேராசிரியர் கூறுதல் காண்க. ro :

கடவுள் வணக்கத்தை நமஸ்க்ரியை யென்பர் வட நூலார். இப்பொழுதுள்ள காப்பியங்களில் காணப்படும் துதிகள் இவ்வகையைச் சேர்ந்தனவாக உள்ளன.

வருபொருள் உரைத்தல் என்பதனை வஸ்து நிர்த் தேசம் என்பர் வடநூலார். கடவுளின் இயல்புகளைப் புகழ்ந்துரைத்தவளவில் நிறுத்தி, இத்தகையோன வணங்குவோமாக என்னும் பொருளைக் குறிப்பாற்பெற வைத்தல் இதன்பாற்படும். தொகை நூல்களின் கடவுள் வாழ்த்துக்கள் இந்த வகையிலேயே அமைந்துள்ளன.

கடவுள் வாழ்த்து, தனக்குப் பயன்பட வாழ்த்துவ தென்றும், உலகுக்குப் பயன்பட வாழ்த்துவதென்றும்

1. சிலப். ப. 190-191. 2. தொல். செய்யுள். 149, பேர்.