உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 தமிழ்க் காப்பியங்கள்

இரண்டு வகைப்படும். நற்றிணையில் உள்ள வாழ்த்தும், கலித்தொகையில் உள்ள வாழ்த்தும் தனக்குப் பயன்பட வாழ்த்தியவை என்பர். குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு என்பவற்றில் உள்ளவை பிறர்க்குப் பயன்பட வாழ்த்தியவை. -

இவ் வாழ்த்து இயற்கை வாழ்த்தென்றும் சார்த்து வகை வாழ்த்தென்றும் இரு வகைப்படும். முன்னதே காப்பியங்களிலும் பிறநூல்களிலும் முதற்கண் வருவது. பின்னது புற நிலை வாழ்த்து முதலியன.

தண்டியலங்கார உரையாசிரியர் இம் மூன்றனுள் ஒன்றும் பலவும் காப்பியத்தில் வருமென்று கூறுகின்றனர். பிற்காலத்து நூலாகிய திருவிளையாடற் புராணத்தில் கடவுள் வணக்கமும், வாழ்த்தும் வந்துள்ளன.

தண்டியலங்கார உரையாசிரியர் இம் மூன்றையும் முறையே வாழ்த்துதல், தெய்வம் வணங்குதல், உரைக் கும் பொருள் உணர்த்தல் என்று கொண்டார். அவ் வுரையை மேற்கொண்டும், அவையடக்க மென்னும் ஒன்றை உடன் கூட்டியும் வாழ்த்தியல், அன்வயடக்கம், தெய்வ வணக்கம், செய்பொருள் என்பவை முன் வரவேண்டுமென்று இலக்கணம் உரைத்தார், மாற னலங்கார முடையார்.

"வைத்த பெருங்காப்பியநிலையும் வாழ்த்தியல்பார் மெய்த்த அவையடக்கம் வீறுசால் - முத்திதரும் தெய்வ வணக்கமுடன் செய்பொருளும் முன்வரவாங் கெய்த வுரைப்பதுதான் ஏய்ந்து.' - தண்டியலங்காரச் சூத்திரம், -

"வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினென்று

ஏற்புடைத் தாகி முன்வர'

1. தொல், செய்யுள். 109. பேர். 2. தொல், செய்புள். 110, பேர். 3. மாறன் . 72. - .