உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தமிழ்க் காப்பியங்கள்

"இனயவகை அறநெறியில் எண்ணிறந்தோர்க்

- கருள்புரிந்து முனிவரவர் மகிழ்ந்தருளப் பெற்றுடைய மூதூர்மேற் புனையுமுரை நம்மளவிற் புகலலாந் தகைமையதோ அகனயதனுக் ககமலராம் அறவனர் பூங்கோயில்” என்று அதனோடு திருவாரூர்ப் பூங்கோயிலையும், திருக் கூட்டச் சிறப்பில் அக்கோயிலில் உள்ள தேவாசிரயன யும் இணைத்துப் பாராட்டி, அங்குள்ள திருக்கூட்டத்தைச் சிறப்பித்து, િ -

"இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான்

அந்த மில்புகழ் ஆலால சுந்தரன் சுந்த ரத்திருத் தொண்டத் தொகைத்தமிழ்

வந்து பாடிய வண்ணம் உரைசெய்வோம்”

என்று சுந்தரமூர்த்தி நாயனுர் வரலாற்றுக்குத் தோற்று வாய் செய்கின்ருர். பின்பு சுந்தரர் வரலாற்றைத் தொடங்கித் திருத்தொண்டத் தொகை பாடிய வரையில் கூறி, -

'தம்பிரான் தோழரவர் தாம்மொழிந்த தமிழ்முறையே

எம்பிரான் தமர்கள் திருத் தொண்டேத்தலுறுகின்றேன்" என்று திருத்தொண்டர் புராணத்தோடு இயைக்கின்ருர்.

இவ்வளவும் திருமலைச் சருக்கம் என்னும் பெய. ரோடு நூலுக்குப் புறவுறுப்பாக உதவுகின்றன இங்ங்னம் அமைத்தது காப்பியத்துக்குரிய மலை, நாடு, நகர் வருணனைகள் முன்பு அமையவேண்டுமென்னும் கருத் திேைலயே என்று தோற்றுகின்றது. இல்லையெனின் கைலைமலையின் சிறப்பையும் சுந்தரமூர்த்தி நாயனர் வரலாற்றையும் கூறு தற்கு வேறு பொருத்தமான

1. பேரிய. ট ঠ প্ৰতিটো - -

2. டிெ திருக்கூட்டச் 11.

3. டிெ தடுத்தாட்கொன ட. 203