உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 151

இடங்கள் இருப்ப, அங்ங்னம் செய்யாது இவ்வாறு தொடர்புற வைத்ததற்குத் தக்க காரணம் வேறு யாது?

சுந்தரமூர்த்தி நாயனுரைத் தலைவராகக் கொண்ட காப்பியமென்று தோற்றும்படி முதற் சருக்கத்தை அமைத்துக்கொண்ட சேக்கிழார், இடையே ஏயர்கோன் கலிக்காம நாயனர் புராணத்திலும், கழறிற்றறிவார் புராணத்திலும் சுந்தரருடைய வரலாற்றை விரவ வைத்து, கடைசிச் சருக்கமாகிய வெள்ளானைச் சருக் கத்தில் சுந்தரர் கைலைக்கு எழுந்தருளிய வரலாற்றைப் பாடிப் பெரிய புராணத்தை நிறைவேற்றுகிருர் சுந்தரர் வரலாறு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நின்று ஒரு தலைவனுடைய கதையின்மேற் படர்ந்த காப்பிய மாகப் பெரிய புராணத்தைத் தோற்றச் செய்கிறது. அதளுேடு சுந்தரரோடு தொடர்புடைய நாடு நகரச் சிறப்புக்களும் பிறவும் காப்பிய இலக்கணத்துக்குரிய இலக்கியங்களாகப் பொருந்துகின்றன.

கச்சியப்ப சிவாசாரியார் இயற்றிய கந்த புராணத் தில் பாட்டுடைத் தலைவர் முருகக் கடவுள். அவருடைய திருவிளையாடல்கள் அக் காப்பியத்திலே கூறப்படு கின்றன. அவர் எல்லாத் தலங்கட்கும் பொதுவான கடவுளாயினும் காப்பியத்துக்குரிய நாட்டுச் சிறப்பும் நகரச் சிறப்பும் கூறுவதற்கு ஒரு காரணம் வேண்டுமே. அதற்காகக் காஞ்சிக் குமரகோட்டத்தில் உறையும் .முருகக் கடவுளேக் கூறி அவரே யாண்டும் உறைவ ரென்று புகுகின்ருர், தோற்றுவாய்ாகத் தொண்டை நாட்டையும் பின் காஞ்சி நகரத்தையும் புகழ்கின்ருர். இங்ங்னம்ே, விநாயக புராணம் பாடிய கச்சியப்ப முனிவரும் தாம் அரங்கேற்றிய இடமாகிய சென்னையில் உள்ள பிரசன்ன விநாயகரைப் புராணத்தோடு தொடர்புபடுத்தித் தொண்டை நாட்டையும் சென்னை