உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 155

என்றும் கூறுவனவற்ருல் பெரிய புராணத்தில் அவ்விலக் கணம் அமைந்துள்ளதென்று அவ்வாசிரியர் எடுத்துக் காட்டுகிருர். . .

பொழுது ೧ುಅಣುಶಿಶT

காப்பியங்களில் கூறப்படும் பருவ வருணனைகள் கவிஞருடைய சிறந்த கவித்துவத்தை வெளிப்படுத்து வன. பழந்தமிழ் நூல்களாகிய தொகைநிலைச் செய்யுட் களில் பருவ வருணனை மிகுதியாக உள்ளன. அகத் திணைக்குரிய பொருள்களுள் ஒன்ருகிய முதற்பொருள் நிலம், பொழுது என்னும் இரு வகைப்படும். பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது எ ன் ப ன. அகப் பொருட் செய்யுட்கள் பலவற்றில் இப் பொழுதுகளைப் பற்றிய செய்திகளைக் காணலாம். ஆகவே, பொழுதை வருணித்தல் தமிழ்ப் புலவர்களுக்கு அடிப்பட்ட வழக்க மாகிவிட்டது. காப்பியக் கவிகள் அவற்றைத் தம்முடைய கதைப்போக்கிலே இடைப்பெய்து கூறுதலால் பின்னும் சுவை மிக்குத் தோன்றும். -

பெரும்பொழுது ஆறு என்றும், சிறுபொழுது ஆறு என்றும் சொல்வர். சிறு பொழுது ஐந்து என்று கூறு வாரும் உளர். ஆறு என்பார் நச்சினர்க்கினியர் முதல் யோர் ஐந்து என்பார் நாற்கவிராச நம்பி முதலியோர் பெரும்பொழுதை ருது வென்று வடமொழியிற் கூறுவர். பருவம் என்பதும் அதுவே. இந்த இருது வருணனையைப் பற்றிய செய்திகள் அணியியல் என்னும் அலங்கார நூலில் உள்ளனவென்று தெரிகின்றது; இந்த இருது வருணனை அணியியலுட் காண்க' என்பதல்ை இதனை

1. யா. வி. ப. 532.