உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 தமிழ்க் காப்பியங்கள்

அறிகிருேம். சிந்தாமணியில் ஆறு பருவங்களையும் முத்தி யிலம்பகத்தில் இருது நுகர்வு என்னும் பகுதியில் திருத் தக்கதேவர் வருணிக்கின்ருர். இப் பருவங்களில் ஏதேனும் ஒன்றைச் செவ்வி நேர்ந்துழி வருணித்தலும் புலவர் இயல்பு. கம்ப ராமாயணத்திலுள்ள கார்காலப் படலம், வில்லி பாரதத்திலுள்ள வசந்த காலச் சருக்கம் என்பன இதற்கு உதாரணங்களாகும். நெடுநல் வாடை, கார் நாற்பது, கார் எட்டு முதலிய நூல்கள் பருவத்தைச் சிறப்பித்தலாற் பெயர் பெற்றமை இங்கே அறிதற் குரியது. இவ்வாறே சிறுபொழுதைச் சிறப்பித்தல் பற்றிக் காப்பிய உறுப்புக்கள் பெயர் பெறுதலைச் சிலப் பதிகாரத்திலுள்ள அந்திமாலைச் சிறப்புச் செய் காதை யாலும், பெருங்கதையில் உள்ள மாலைப் புலம்பலாலும், இவை போன்றவற்ருலும் உணரலாம்.

முன்னர்க் கூறிய ஐந்து நில வருணனையும், இப்போது கூறிய பொழுது வருணனையும் வார்த்தை யென்னும் ஒருவகை அணியின்பாற்படும். இது வீர சோழிய உரையில் உள்ள பின்வரும் பகுதியால் உணர லாகும்." -

"காலமும் இடனும் வாலிதிற் புகழ்வார், ஆகிய தடுப்பினது வார்த்தையாகும்' என்று வார்த் தைக்கு இலக்கணம் கூறுப. காலமாவது பொழுதும் பருவமும் எனக் கொள்க. இடமாவது பாலை குறிஞ்சி நெய்தல் முல்லை மருதம் என்னும் ஐந்து நிலமுமாம்.

காலம் பற்றிய வருணனை கால வார்த்தை யென்றும், இடம் பற்றியது இட வார்த்தையென்றும் வழங்கும்.

1. வீர. 157, உரை.