உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 157. இரு சுடர்த் தோற்றமும் மறைவும்

- இரு சுடர்த் தோற்றம் என்பது சூரிய சந்திரர் களின் உதயமாகும். பெரும்பான்மையான காப்பியங் களில் இவ்விரண்டோடு இரு சுடரின் மறைவும் புனைந்து உரைக்கப்படும். சூரியனது அத்தமனமூம் சந்திரனது உதயமும் அடுத்தடுத்தே வருணிக்கப் பெறும். மாலைக் கால வருணனையில் இவ்விரண்டும் அகிமயும். இடத்திற் குத் தக்க குறிப்பை ஏற்றி வருணித்தல் புலவர் இயல்பு. -

இதுகாறும் கூறிவந்தவை இயற்கையாக அமைந்த பொருள்களின் வருணனைகளாம். இனி, காப்பியத்துள் வரும் செய்திகளுள் இவ் வருணனை அல்லாத பிற வற்றை இன்பச் செய்திகள் என்றும் அரசியல் என்றும் பகுத்துக்கொள்ளலாம். -

(1) நன்மணம் புணர்தல், பூம் பொழில் நுகர்தல், புனல் விளையாடல், தேம்பிழி மதுக்களி, சிறுவரைப் பெறுதல், புலவியிற் புலத்தல், கலவியிற் களித்தல் என்பன இன்பச் செய்திகளாம். இவற்றையன்றி மலை விளையாட்டு, உலாப் போதல் முதலிய வேறு செய்தி களும் கரப்பியங்களில் வருகின்றன.

(2) முடி கவித்தல், மந்திரம், தூது, செலவு, இகல், வென்றி என்பன அரசியற் செய்திகளாம். இவற்றேடு தொடர்புடைய முறை செய்தல், நாடு காத்தல் முதலியனவும் காப்பியங்களுக்கு இன்றி யமையாத செய்திகள் என்று தெரிய வருகின்றது.

இவற்றைப்பற்றிச் சிறிது ஆராய்வோம். -