உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 தமிழ்க் காப்பியங்கள்

இன்பச் செய்திகள்

1. நன்மணம் புணர்தல் : காப்பியத் தலைவனும் தலைவியும் அன்பு வயப்பட்டு இணைந்து மணம் புரிதல். இது காப்பியத்தின் திரண்ட பொருள்களுள் ஒன் ருகிய இன்பத்தின் பகுதி. எனவே காப்பியத்தின் வரலாற்றில் இந் நிகழ்ச்சியைப் புலப்படுத்தும் பகுதி சுவை மிக்கதாக இருத்தல் வேண்டும் புலவர்கள் தம்முடைய கவித் திறத்தைக் காட்டுவதற்குரிய பகுதிகளுள் இதுவும் ஒன்று. கம்பராமாயணத்தில் கடிமணப் படலம் என்று ஒரு படலமே உண்டு.

2. பூம்பொழில் நுகர்தல் : மகளிரும் ஆடவரும் ஒன்றுபட்டு இன்புறும் பொழில் விளையாட்டைப் புலவர் கள் பலபடியாகப் பாராட்டுவார்கள். கம்பராமாயணத்தி லுள்ள பூக் கொய் படலம் என்பது இச் செய்தியைக் கூறுவதே யாகும்.

3. புனல் விளையாடல் : இது மேற்கூறிய விளை யாடல்களுள் ஒன்று. பரிபாடல் என்னும் சங்ககாலச் செய்யுளில் இவ்விளையாட்டு அழகாக வருணிக்கப்படு கின்றது. கம்பர் நீர் விளையாட்டுப் படலம் என்று தனியே ஒரு படலம் அமைப்பர். -

4. களியாட்டு : மதுவை நுகர்ந்த மகளிரும் ஆடவரும் இன்புறும் செய்தி கூறுதல். இதைக் காம பானம் என்பர். நன்மணம் புணர்ந்த மகளிரும் ஆடவ ரும் பொழில் நுகர்ந்தும் புனல் விளையாடியும் களியாட்டு

1. காம பானம், வீரபானம் என்னும் இரண்டும் காப்பியங்களில் சொல்லப் பெறுவன; மாறன், ப. 77, பார்க்க.