பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

காப்பியங்கள்

மொழி உண்டான வரலாறு

மனனுணர்வாகிய ஆரும் அறிவைப் பெற்ற மக்க ளுக்கு அவ்வுணர்ச்சியைப் பிறர் அறிந்து கொள்ளுதற் குரிய கருவியாக அமைந்துள்ளது மொழியாகும். உலகத்திலுள்ள படைப்புக்களுள் மனிதன் பேச்சு’ என்னும் பெறற்கரும் பேற்றைப் பெற்றுள் ளான். விலங்கினங்களும் பறவையினங்களும் தத்தமக்கெனத். தனிப்பட்ட மொழிகளை உடையனவென்று ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர். அவை எல்லா விலங்கின்ங் களிடத்தும் பறவையினங்களிடத்தும் காணப்படுவன அல்ல. அன்றியும், படைப்புக் காலந் தொடங்கி இயற் கையிலே தமக்கு வாய்த்த ஒலி வேறுபாடுகளின் அடிப் பட்ட பழக்கத்தினுல் அவை ஒரு வகையாக ஒலியை உணர்ந்து கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன.

மனிதனே தன் மனனுணர்வின் ஆச்சரிய சக்தி யாலும் தன்னுடைய செயற்கை நலத்தாலும் உலகத்தில்

1. கொல்காப்பியம், மரபு, 27, 33.