பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தமிழ்க் காப்பியங்கள்

பலவேறு திறப்பட்ட நுகர் பொருள்களே ஆக்கிக் கொள் கிருன். அவன் கைப்படும் மண் குடமாகிறது; விளக் காகின்றது; மாளிகையாகிறது; பதுமையாகிறது. அவன் கைப்படும் இரும்பு, ஊசி முதற் புேலி மனித யந்திரம் வரையில் உள்ள அவதாரங்களை எடுக்கிறது. இங்ங்ணம் எல்லாப் பொருளையும் காலத்தின் போக்கிற்கு ஏற்பப் புதுப் புது விதமாகச் சமைத்துக் கொள்ளும் ஊக்கம் மனித சமூகத்தினிடையே உள்ளது. அந்த உள்ள எழுச்சி உலகையே மாற்றி வைக்கிறது.

புறக்கருவிகளைக் கொண்டும் அகக் கருவிகளைக் கொண்டும் தான் நுகரும் பொருள்களைப் பலபட அமைக்கும் மனிதன், தன்னுடைய உணர்வைப் புலப் படுத்தும் கருவியாகிய மொழியையும் பல்லாயிரம் ஆண்டு களாகச் செப்பஞ் செய்து கொண்டே வந்திருக்கிருன்.

மனவுணர்ச்சியை மட்டும் வெளியிட உண்டான ஒலி வரவர விரிவடைந்தது. உலகத்திலுள்ள பொருள்களைக் குறிப்பிட எண்ணியவர்கள் அவற்றிற்குப் பெயர்களை அமைத்தார்கள் தொழில்களையும் குணங்களையும் குறிக்கச் சொற்களை அமைத்துக் கொண்டார்கள். அங்ங்னம் அமைத்துவந்த நிலையில் பின்வரும் சந்ததியார்கள் முன்னவர்கள் கற்பித்தவற்றைப் பின்னும் எளியன வாகவும் அழகுடையனவாகவும் செப்பஞ் செய்து வழங்கி ஞர்கள். இதல்ை, வெறும் சங்கேதங்களாக இருந்த தொனிகள் சொற்களாகவும், சொற்கள் சொற்ருெடர் களாகவும், தொடர்கள் பொருட்டொடர்புடைய பேச்சா கவும் வளர்ந்தன. மனிதன் எதையும் பேச்சாலேயே குறிப்பிடும் நிலைக்கு வந்த காலத்தில்தான் மிருகங்களைக் காட்டிலும் பல்லாயிர மடங்கு உயர்வடைந்தவனென் பதை அறிந்து உவந்தான்.