பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியங்கள் 3.

இலக்கணத்தின் தோற்றம்

அக்கால முதல் வெறும் பேச்சளவில் இருந்த மொழிக்குச் சில கட்டுப்பாடுகள் உண்டாயின. ஒரு கூட்டத்தார் தாம் பேசும் பேச்சுக்களை வகைப்படுத்திக் கொண்டு ஒரே மாதிரியான முறையில் வழங்கப் பயின் றனர். இந்தக் கட்டுப்பாட்டினல் அமைந்த முறை பின்பு விரிந்த குழுவினரிடத்திலே பரவியது. அதனுல் ஒருவர் கருத்தை மற்ருெருவர் அறிவது முன்னிலும் பன்மடங்கு எளிதாயிற்று. இங்ஙனம் உண்டான கட்டுப்பாடு உறுதி பெறப் பெற இக் கட்டுப்பாட்டைக் கடந்து பேசுவதை இழுக்காகக் கருதினர்.

ஒலி வடிவில் இருந்த மொழி தம் கண்முன் இருப்ப வர்களுக்கே பயன்படுவதை யறிந்த மனித சமூகத்தினர், அதனைச் சில குறியீடுகளால் எழுதிக் காண்பிக்கத் தொடங்கினர். நாகரிகம் வளர வளர, ஒலி வடிவில் அமைந்த மொழிக்கு வரி வடிவமும் இலக்கணமும்

உண்டாயின. .

வரி வடிவத்தைப் பெற்றதுமுதல் மொழியானது உலகியலுக்கு மட்டும் கருவியாக இருந்து வந்த நிலை மாறியது; மக்கள் தம் அறிவிற்கு இன்பமூட்டும் வகையில் அதைப் பண்படுத்தத் தொடங்கினர்கள். அப்பொழுது தான் முதல் முதலில் புத்தகங்களென்னும் அரிய பொருள்கள் உலகத்தில் உண்டாயின. -

பேச்சும் எழுத்தும் வளரப் பலராலும் வழங்கப் பட்டுவரும் மொழியிலுள்ள பொது இயல்புகளை அறிஞர் ஆராய்ந்தனர். அந்த இயல்புகளே அழகுடையன வென்று கருதி அவற்றை வரம்புகளாக வரையறுத்துக் கொண்டனர்; அவ்வரையறையே இலக்கணமென்பது.