பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 - தமிழ்க் காப்பியங்கள்

இலக்கணமும் இலக்கியமும்

ஒரு மொழியில் இலக்கியங்கள் வளர்ச்சி அடைய அடைய அம்மொழியிலுள்ள பழைய இலக்கணத்திற்கு நெகிழ்ச்சி ஏற்படும். சில காலங்களில் ஒரு மொழியில் போலி இலக்கியங்கள் பல வெள்ளமாகத் தலைப்படும். அக்காலங்களிலெல்லாம் அறிவாற் றல் நிரம்பிய ஆன்ருேர்கள் பழமையைப் பெரிதும் போற்றிப் புதுமை யையும் தழுவி இலக்கணங்களை அமைத்து வற்புறுத்தி வந்தனர். நல்ல இலக்கியங்கள் பல பெரியோர்களால் இயற்றப்படுங் காலங்களில் அவை முன்னேர் அமைத்த வரம்புக்குமேல் வழிந்தோடுவதும் உண்டு. அப்பொழுது அவ்விலக்கியம் கண்டோர் தம் இலக்கியங்களிற் குறிப் பித்த நெறியே இலக்கணமாக அமைந்துவிடும். இதையே இலக்கண நூலார் உடம்படு புணர்த்தல்' என்று விதந்தோதுகின்றனர். 'இலக்கியங் கண்டதற். கிலக்கணம் இயம்பும்' மரபினையுடைய தமிழ்ப் பெரியார்கள், 'பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவல கால வகையி ேைன' என்னும் மேற்கோளுக் கியைய இங்ங்னம் செய்கின்றனர்.

இலக்கணத்தின் வரம்புக்கு அடங்கி நூல் இயற்று வதும் இலக்கண வரம்பைத் தகர்த்து நூல் இயற்றுவது மாகிய செயல்களை அறுதியிடுவதற்குப் பெரிய நூலாசிரி யர்களே வல்லவர்கள். மொழியின் அடிப்படையான வரம்புகளை அவர் கடவார். முற்காலத்தில் தமிழிற் காணப்படாத பல புதிய துறைகள் பிற்காலத்துத் தமிழ் நூல்களிற் காணப்பட்டாலும் தமிழுக்கெனத் தனித் துள்ள கவி மரபு, மாலையூடே இழைபோல எங்கும் ஒரே படித்தாகக் காணப்படும். -

1. நன்னூல், 141. 2. தன்னு ல், 462,