பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியங்கள் 5 இலக்கியமும் காலப் போக்கும்

ஒரு மொழியிலுள்ள நூல்கள் அவ்வக் காலத்தின் நாகரிகத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன. ஒரு நூல் இயற்றப்படும் காலத்தில் எவை எவை நாகரிகமாகவும் அறிஞர்களுடைய செயல்களாகவும் வியக்கத்தக்க செய்திகளாகவும் உணரப்பட்டனவோ அவற்றை அங்ங்னமே ஆசிரியர் தம் நூலில் புலப்படுத்தியிருப்பார். பண்டைத் தமிழ் நூல்களில் அகமும் புறமுமாகிய வரை யறைக்குட்பட்டு ஆயிரக்கணக்கான செய்யுட்கள் புலவர் களால் இயற்றப்பெற்றன; அகத்துறைச் செய்யுட்கள் அளவின்றி யெழுந்தன. அக்காலத்தில் அவற்றிற்குச் சிறந்த மதிப்பு இருந்து வந்தது. பிற்காலத்தில் வந்த புலவர்கள் அத்தகைய செய்யுட்களைப் பாடவில்லை. மிகப் பிற்காலத்தில் வடமொழியிலுள்ள நூற்றுக்கணக்கான புராணங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. தலங் களைப்பற்றிய ஆராய்ச்சியும் தல வழிபாடும் மலிந்திருந்த அக்காலத்திலே கவிஞர்களுக்கு அத்தகைய இலக்கியப்

படைப்பே ஊக்கத்தை உண்டாக்கியது.

இக்காலத்தில் ஆங்கில அறிவின் தொடர்பினுல்

இலக்கியப் படைப்பு வேறுபட்டிருக்கின்றது. ஆங்கிலம்

அறிந்த தமிழ்ப் புலவர்கள் வொர்ட்ஸ்வொர்த்தினுடைய

பாக்களை மொழிபெயர்ப்பதிலும், ஷெல்லியின் வருணனை

களைத் தழுவிச் செய்யுள் இயற்றுவதிலும் முனைந்து நிற்கின்றனர். இத்தகைய வேறுபாடுகள் நிகழ்வதற்குக் காரணம் என்ன? காலதேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப மனிதனுடைய நடை உடை பாவனைகள் மாறி வருகின்றன அல்லவா? அவ்வாறே அவனுடைய நோக் கங்களும் விருப்பமும் மாறுகின்றன; அவ னுல் இயற்றப் படும் நூல்களும் வேற்றுமை அடைகின்றன.