பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

õ தமிழ்க் காப்பியங்கள்

இலக்கியங்கள் எவை?

நூல்கள் என்னும் பெயருக்குத் தகுதியான புத்த கங்கள், தக்க அறிவுச் செல்வமுடையவராலேயே இயற்றப்பெறுகின்றன. பழைய கால முதற்கொண்டே நூல்கள் இயற்றுபவர்கள் பலவிதச் சிறப்புக்களையும் அறிவாற்றல்களையும் உடையவர்களாக இருந்தனர். யாவரும் நூல் இயற்றலென்பது இயலாத செயல். மனிதர்களுள்ளும் அறிவால் நிரம்பியவர் மிகச் சிறு தொகையினரே யென்பது ஆன்ளுேர் துணிபு. -

"ஆர்த்தசபை நூற்றெருவர் ஆயிரத்தொன் ரும்புலவர்

வார்த்தை பதின யிரத்தொருவர்'

என்ற வெண்பா, புலவர்களின் அருமையை வெளியிடு கின்றது. ஆகவே நூல்களும் அருமையாகவே இயற்றப் பட்டன. இக்காலத்தில் யாரும் புத்தகம் எழுதும் வழக் கத்தை மேற்கொள்கின்றனர். அவர்கள் இயற்றியவை. அனைத்தும் நூல்களாக மனிதனுடைய அறிவுக்குப் பயன் எவையோ அவையே நூல்கள். மாந்தர் மனக் கோட்டம் தீர்க்கும் நூல்' என்பது அறியத்,ாக்கது.

இக்காலத்தில் ஆயிரக்கணக்காக வெளியிடப்படும் செய்திப் பத்திரிகைகளும் மாதப் பத்திரிகைகள் முதலி யனவும் கதைகளும் மனிதர்கள் படிக்கும் வழக்கத்தை மிகுதிப்படுத்தியிருக்கின்றன. ஆயினும் அவர்களுடைய மனத்தில் ஒன்றும் தங்குவதில்லை; எல்லாம் அடுத்த கணத்தில் மறந்துவிடுகின்றன. நம்முடைய கிராமத்து மக்கள் திண்ணையிற் கூடித் தினமும் வம்பளக்கிருர்கள். அவர்களுடைய பேச்சுக்களில் எவ்வளவோ பழமைகளும் புதுமைகளும் வெளிவருகின்றன: எவ்வளவோ உவ:

1. ஒளவையார் 2 به س» یا it ఖైు వ, 25

- #