பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியங்கள் 7

மைகள்,பழமொழிகள், உதாரணங்கள் மலர்கின்றன, எவ் வளவோ கண்தகள் கிளைக்கின்றன; அவ்வளவும் அந்தத் திண்ணையிலிருந்து கீழே இறங்கிய மறுகணத்தில் மறக்கப்படுகின்றன. இந்த நிலையிலேதான் இக்காலத் தில் உள்ள படிப்புப் பயிற்சி உள்ளது. மனிதன் படிப் பனவற்றுள் சக்கையைத்தான் அதிகமாக ஏற்றுக் கொள்கிருன். - -

இவ்வளவு மிகுதியாக உள்ள புத்தக வெளியீடு களில் மனிதன் உள்ளத்துள் ஊடுருவிச் சென்று பதிவன சிலவாகத்தான் இருக்கும். அவையே இலக்கியங் கள். இலக்கியத்துக்கு மனிதனுடைய உள்ளுணர்ச்சி யைக் கிண்டிவிடும் ஆற்றல் உண்டு. இலக்கியம் மனித வாழ்வுக்கு அரண்கோலிப் பாதுகாக்கும். மனித வாழ்வுக் குரிய சட்டங்களாகிய வேதங்களும், பைபிளும், கொரானும் உயிர்க்குறுதி பயக்கும் பேரிலக்கியங்களாகப் பேரறிஞர்களாற் கொண்டாடப்படுகின்றன அல்லவா? எந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு மீண்டும் பலமுறை படிக்கும் தோற்றம் உண்டாகின்றதோ அது சிறந்த இலக்கியம்; எந்தப் புத்தகம் படிக்குந்தோறும், பன்முறை முன்பே படித்ததாக இருந்தாலும் புதுப் புதுச் சுவையை உண்டாக்குகிறதோ அது உயர்ந்த இலக்கியம்.

'ஆயுந் தொறுந்தொறும் இன்பந் தருந்தமிழ்”

தேருந் தொறுமினி தாந்தமிழ்” என்று கூறிப் போந்த புலவர்களுடைய உள்ளக் கருத் தைச் சிந்தித்துப் பார்த்தால் இவ்வுண்மை புலப்படும். தேருந்தொறும் இன்பம் தருவதுதான் தமிழ், அந்நூலே, தமிழிலக்கியம்; > -

'நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு' 1. திருக்குறள், 783,