பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தமிழ்க் காப்பியங்கள்

என்ற வாய்மொழியே நமக்கு உரையாணி. பயிலுந் தொறும் நயம் பயவாதாயின் அது சிறந்த நூலன் றென்று தெள்ளத் தெளியக் கூறிவிடலாம்; அதற்கு வள்ளுவரே ஆதாரம்.

ஒருமுறை படித்த மாத்திரத்தில் இன்பந்தரும் புத்த கங்கள் சில உண்டு; அவற்றை மீண்டும் படிப்பதற்கு ஊக்கம் உண்டர்காது. இத்தகையவை இலக்கியங்க ளாகா. ஒருமுறை படித்த மாத்திரத்திலேயே பொருள் புலப்படாமல் இருந்தாலும் நுணுகி ஆராய ஆராயச் சுவை பயக்கும் நூல்கள் உள்ளன. அவை இலக்கியங் களே; அவை நுனியிற் கரும்புதின் றற்றே என்பது போல வர வர இனிப்பவையல்லவர்? பண்புடையாளர் தொடர்புக்கு இலக்கணமாகிய அது நூற்ருெடர்புக்கும் இலக்கணமே யன்ருே? முதல் முறை தொடங்கினது முதல் ஆயுள் உள்ள வரையில் படித்தாலும் வெறுப்பில் லாச் சுவை பயப்பன, இலக்கியங்களில் உயர்தர மானவை. மனிதனுடைய அறிவுக்கு அவைதாம் அமுதம். அவற்றைக் கற்றலின் இனிமையை உணர்ந்தே திருவள்ளுவ தேவர், -

“.........என்ைெருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு’ என்று இரங்கியிருக்க வேண்டும்.

எத்தனை தட்வை படித்தபோதும் விளங்காதவை உளவேல் அவை புத்தகங்களே அல்ல. அவற்றை நூல் வரிசையிற் சேர்ப்பதிற் பயன் இல்லை; புல்லிதழ் பூவுக்கு முண்டு என்றதுபோல இலக்கியச் சோலையிலே அவற் றைப் புல்லிதழாகவும் முள் மரமாகவும் கருதவேண்டுமே யன்றி வேறன்று.

1. திருக்குறள், 897,