பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியங்கள் 9.

நூற்பயன்

நூல்களால் சொல்லப்படுவனவற்றின் திரண்ட கருத்து அறம் பொருள் இன்பம் வீடென்னும் நான்கைப் பற்றியதாக இருக்கவேண்டுமென்பது வரையறை. "அறம்பொரு ளின்பம் வீடடைதல் நூற்பயனே' என்றது காண்க. அகமும் புறமுமாக அடங்கும் பொருட் பகுதிகள் இந்நான்கையும் கூறுமென்பது, அகத்திணைக் கண் இன்பமும் புறத்திணைக்கண் ஒழிந்த மூன்று பொருளும் உணர்த்துப’ (தொல். அகத். சூ. 1, ந.) என்ப தல்ை பெறப்படும். எனவே, மக்கட்கு உறுதி பயப்பன வாகிய நாற்பொருளைப் ப்யக்கும் நடைநெறியன நூல்கள் என்பது போதரும். -

நூல்களின் வகை

இங்ங்ணம் நாற்பொருளையும் பயக்கும் நூல்கள் அப் பொருள்களைவெளியிடும் முறைகளில் வேறுபாடு உண்டு. அறத்திற்குரிய விதிகளையும் விலக்குகளையும் நேரே நீதி யாகப் புலப்படுத்தும் நூல்கள் உள்ளன. அவற்றையே உவமை முகத்தாலும் உதாரண முகத்தாலும் புலப்படுத் தும், நூல்கள் உள் ளன. கதைப்போக்கிலே அந்த நீதி களைக் குறிப்பிற் புலப்படுத்திச் செல்லும் நூல்களும் இருக்கின்றன. எல்லா நூல்களும் உயர்ந்த கருத்துக் களையே வெளியிடுவனவாயினும், கற்போருக்கு அக் கருத்துக்களை எளிய முறையில் இன்பம் பயப்பச் சொல்லும் நூல்கள் ஒரு வகை. காப்பியங்கள் இவ் வகையைச் சேர்ந்தனவே.

வடமொழியாளர் வேதத்தைப் பிரபு ஸம்மிதையென் வும், ஸ்மிருதிகளை ஸ-ஹ்ருத் ஸம்மிதையெனவும், காவி

o, - 数、 。 ** * .; .م .... l 1, 5: ( ) i: ; :}. * * த் : . . .த - காவ வி