பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தமிழ்க் காப்பியங்கள்

யங்களைக் காந்தா ஸம்மிதை'யெனவும், புராண இதி: காசங்களைச் சிசுலம்மிதையெனவும் கூறுகின்றனர். அவ்வகையில் காவியத்தை மனைவியின் உரைக்கு. இணையாகச் சொல்வர். கணவனுக்குத் தனது கருத்தை அறிவிக்கப் புகும் மனைவி மிக இனிய சொற்களால் மனங்கவரும் முறையில் மெல்ல அறிவித்தலைப்போல, காவியங்கள் உயர்ந்த நீதிகளைச் சொற்பொருள் நயங்களோடு மனம் கவரும்வண்ணம் புலப்படுத்து கின்றன. பிரபு லம்மிதை யாகிய வேதம் கட்டளையிடு கிறது; ஸ்ாஹ்ருத் ஸ்ம்மிதையாகிய ஸ்மிருதி அறிவுரை கூறுகின்றது; காவியம் இன்ப மொழியில் கருத்துக்களைச் சொல்கிறது; சிசுலம்மிதையாகிய புராணம் அறியா தாருக்குக் கதை கூறுகின்றது. -

காப்பியத்தின் சிறப்பு இவற்றுள் இன்பம் தோன்ற நிற்பது மனைவியின் உரைக்கு ஒப்பாகும் காவியமே யாகும். காவியமே மொழி யின் சிறப்பையும் அணிகளையும் புலப்படுத்துகின்றது. காவிய இலக்கணம் கூறும் நூலே வேதாங்கங்களோடு ஒப்ப மதிப்பர் வட நூலார். காவிய மீமாம்லையென்னும் வட நூலில் ராஜசேகர மகாகவி யென்பவர் அதனை ஏழாவது அங்கமாக வகுத்துள்ளார். அன்றியும். கலைமகள் இறைவனை நோக்கி நெடுந்தவம் புரிந்து காவ்ய புருஷனைப் பெற்றனளென்றும், அவனுடைய மனைவி ஸாஹித்ய வித்தை யென்றும் உருவக வகை. யால் ஒரு வரலாற்றை அமைக்கின்ருர். அவ்வரலாற்றல் ஏனைய நூல்கள் யாவற்றிலும் காவியமே சிறந்த, தென்னும் அவரது கொள்கையை அறியலாம்.

1. Kavyaprakasa of Mammata, cited in History of Sanskrit

Poetics, Vol. II, pp. 50, 51. § -

2, ஜாயா எம்மிதை யெனவும் சொல்வர்.