பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியங்கள் 1}

வனப்பினைப்பற்றிக் கூறவந்த பேராசிரியர், பல செய்யுளும் உறுப்பாய்த் திரண்டு பெருகிய தொடர் நிலையதே வனப்பென்னும் பெயர்ப் பகுதி வகையான் ஏற்ப தென்பது' என்று கூறுகின் ருர். வனப்பு - அழகு. இதல்ை ஒரு மொழியின் வனப்புக்களை அம்மொழியி லுள்ள தொடர்நிலைச் செய்யுட்களாகிய காப்பியங்களி ஞல் அறிந்துகொள்ளலா மென்பதும், காப்பியங்களைப் போல வனப்பினைப் புலப்படுத்துவதில் தலைமையுடையன பிற அல்ல வென்பதும் கொள்ளக் கிடக்கின்றன.

அறிவால் அமைந்த புலவர்கள் இயற்றும் நூல்கள் யாவற்றினும் தலைசிறந்தது காப்பியமே யாகும். அது நடையினுலும் பொருளிலுைம் இன்பத்தையும், பயனுல் உறுதிப் பொருளையும் பயப்பது போலப் பிறவகை நூல்கள் பயப்பதில்லை.

'க வியா ற் பாடப்படுவனவெல்லாம் காப் பி ய மல்லவோ, பொருட்டொடர் நிலையைக் காப்பியமென்றது என்னை யெனின், சேற்றுள் தோன்றுவனவெல்லாம் பங்கயமெனப் பெயர் பெறுமாயினும், அப்பெயர் தாமரை ஒன்றன் மேற்றே யாயினவாறுபோல இப்பெயர் பொருட் டொடர் நிலைக்கே ஆயிற்று' என்று தண்டியலங்கார வுரையாசிரியர் கூறுகின்ருர். கவியாற் செய்யப்படுவன வற்றுள் பொருட்டொடர் நிலைக்கே சிறப்பாகக் காப்பிய மென்னும் பெயர் வந்த காரணத்தைத் தெரிவிக்கும் இவர் கூற்ருல் கவிஞர் இயற்றும் பலவற்றுள்ளும் காப்பியமே,

‘மாசறத் தெளிந்த மணிநீ ரிலஞ்சிப் - பாசடைப் பரப்பிற் பன்மல. ரிடைநின்று ஒருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை” போன்று ஒரு தனி யோங்கி நிற்பதென்பது புல கிைன்றது. -

1 മ് செய்யுள். 235, உரை. 2. மனிமேகலை, 4 : 7-9.