பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 காப்பிய இலக்கண நூல்கள்

பொருட்டொடர் நிலை

காப்பியமென்பது காவ்யமிென்னும் ஆரியச் சொல் திரிந்த மொழி. கவியாற் செய்யப்படுவது காவியம். எனவே, பொதுவாகச் செய்யுளெல்லாம் காவியம்ென்றே கூறத்தகும். ஆயினும் தமிழ் வழக்காற்றில் பெரும்பாலும் பொருட்டொடர்நிலைக்கே அப்பெயர் வழங்குவதாயிற்று.

நூல் வகை

தமிழ்ச் செய்யுளைத் தொல்காப்பியனர் ஏழு வகை யாக்கினர். அவை முறையே (1) பாட்டு, (2) உரை, (3) நூல், (4) வாய் மொழி, (5) பிசி, (6) அங்கதம், (7) முதுசொல் என்பன.” - -

1. காப்பியமாவது விழுமிய பெ. குள் கொண்டு விளங்கிய சொற்ருெடையாம்...... செய்யுளெனினும் காப்பியமெனினும் ஒக்கும். செய்யுளென்னும் தொழிற்பெயர் கவியின் செய்கையாலாகிய பிரபந்தத் திற்காயிற்று, காவிய மென்னும் வடமொழிக்கும் இதுவே பொருள். இதனே யாப்பித்கு கட்டுரைக்கும் கொள்க.தண்டியலங்கர லாசம். பக்கம்,3. 2. நூல்களே வகைப்படுத்த வக்த காவிய மீமாம்ஸை யென்ற வட மொழி நூலாசிரியர் அவற்றை வாங்மய மென்னும் பெயராற் குறிக்கின்றனர்.அவ்வாங்மயம் சாஸ்திரமென்றும் காவிய மென்றும் இரண்டு வகைப்படும். சாஸ்திரத்தை மேல்காட்டார் லயன்ஸ் (Science) என்றும், தாவியத்தை விடரேசர்" (Literature) என்றும் கூறுகின்றனர், தமிழில் இவற்றை முறையே நூல் என்றும், பா என்றும் வழங்கினர்.