பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கண நூல்கள் 13.

'பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே

அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும் மண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லே யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மஞர் புலவர்.”

. (தொல்காப்பியம், செய்யுள். 79) இவற்றுள் தலைமையுடையன முதலில் உள்ள மூன்றுமாம்.

இலக்கணம் நூலென்பது இலக்கணம். இவ்வகையில் வடமொழி யாளர் கூறும் சாஸ்திரமும் மேல்நாட்டார் கூறும் ஸ்யன் லாம் அடங்கும். பழங்காலத்தில் நூலென்னும் சொல் இலக்கணத்திற்கே வழங்கியது.

'மரபுநிலை திரியா மாட்சிய வாகி

உரைபடு நூல்தாம் இருவகை இயல முத்லும் வழியுமென நூதலிய நெறியின’’ - •. .تحتچست , (தொல். மரபு. 93): என்னும் சூத்திர உரையிற் பேராசிரியர், இது, மேற் கூறப்பட்ட மரபு வழக்கிற்கேயன்றி இலக்கணம் செய். வார்க்கும் வேண்டுமெனவும் அவ்விலக்கணம் இனைப் பகுதித்தெனவும் கூறுகின்றது எனக் கூறுமுகத்தால் நூலென்றது இலக்கணமென்பதைப் புலப்படுத்துகிருர். மொழிக்கு இலக்கணம் கூறுவதன்றிப் பிற பொருள் களுக்கு இலக்கணம் கூறும் சாஸ்திரங்களும் இலக்கண மெனவும் நூலெனவும் சொல்லப்பெறும். மாணிக்க மணியினைச் செவ்வண்ணம் முதலாயின. சில இலக்கணம் கூறிய நூல் கிடப்பக் கருவண்ணம் முதலாயினவும் அதற்கு இலக்கணமென்று ஒருவன் எதிர்நூல் என்பதோர்

1. தொல்காப்பியம், செய்யுள்: 165 - 72,