பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தமிழ்க் காப்பியங்கள்

நூல் பிற்காலத்துச் செய்யுமாயின் அஃது அதன் இலக்கணமெனப் படாதாகலானென்பது (தொல். மரபு, '93, பேர்.) என்னும் பேராசிரியர் உரைக்கண் மணியினது இலக்கணம் கூறும் சாஸ்திரத்தையும் நூலெனவே குறித் தலைக் காண்க. இலக்கணச் சூத்திர யாப்பை நூற்பா வென்று வழங்குவதும் இலக்கணம் நூலென்னும் பெயராற் குறிக்கப்படும் வழக்கத்தை உணர்த்தும்.

பாட்டு

பாட்டென்பது காவிய மென்றும் பொயெட்ரி" (Poetry) யென்றும் பிற மொழிகளில் வழங்கப்படு கின்றது. பாவென்றும் தமிழில் வழங்கும். Y.

பாவினைத் தனிநிலைச் செய்யுள், தொடர்நிலைச் செய்யுள், நாடகச் செய்யுளென மூன்று வகையாகப் பிரிக்கலாம். இவற்றையே ஆங்கில மொழியில் முறையே லிரிக் (Lytic), "எபிக் (Epic), 'ட்ராமா (Drama) என்று கூறுவர். வடமொழியிலுள்ள காவியப் பிரிவுகளையும் இம் மூவகையிலே அடக்கிவிடலா மென்பர். -

காப்பிய இலக்கண நூல்கள் கவிஞளுல் இயற்றப்பெறும் காவியத்துக்குரிய இலக் கணங்களைக் கூறும் நூல்கள் வடமொழியில் அளவிற்ந் தனவாக உள்ளன. அலங்கார சாஸ்திரங்கள் யாவும் காவியத்தினுடைய இலக்கணங்களைத் தெரிவிப்பனவே யாகும். ஆங்கிலம் முதலிய மொழிகளில் கவிச் சுவை

1. P. V. Kane: History of Alamkara Literature—Introduction, p. CLVIII. The divisions of Poetry: “As in modern works poetry is divided into Epic, Lyric, Dramatic, so in Sanskrit works also it is divided.”