பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கண நூல்கள் 15

யைப்பற்றியும் காவியங்களைப்பற்றியும் பேரறிஞர்கள் பலர் ஆராய்ந்து எழுதியிருக்கிருர்கள். பழங்காலத்திலே அரிஸ்டோடலென்னும் கிரேக்கப் பேரறிஞர் காவிய கதி யைப்பற்றிக் கூறும் நூலொன்றை இயற்றியிருக் கின்றனர். வடமொழியைத் தழுவி இலக்கணம் அமைத் துக்கொண்ட இந்திய நாட்டு மொழிகள் பலவற்றிலும் அணியிலக்கணங்களும் காவிய இலக்கணங்களும்

£2-6f 6ft 6 or , .

தமிழில் மிகப் பழங்காலத்தில் செய்யுள் இலக் கணத்தையும் காவிய இலக்கணத்தையும் தனியே வரை யறுத்து உரைக்கும் நூல் இல்லையென்றே தோற்று கின்றது. ஆயினும் அக்காலத்தில் எழுந்த இலக்கண நூல்களில் அங்கங்கே சில பகுதிகள் காவியங்களின் இயல்பை வரையறுத்துக் கூறுகின்றன. - -

காப்பிய இயல்பை உணர்த்தும் நூல்கள்

தலைச் சங்கத்தில் எண்ணிறந்த புலவர்கள் ஒன்று கூடித் தமிழாராய்ந்தனரென்றும், அவர்கள் பல இலக் கண இலக்கியங்களை இயற்றினரென்றும் நாம் அறிகின் ருேம். முத்தமிழும் மிக விளக்கம் பெற்றுத் திகழ்ந்த அக்காலத்தில் விரிந்திருந்த இலக்கியப் பரப்புக்கு ஏற்பப் பெரும் பிண்டமாக முத்தமிழின் இலக்கணங்களையும் தெரிவிக்கும் அகத்தியத்தை அகத்தியர் இயற்றியருளினர். முதற்சங்க காலத்தினும் இடைச்சங்க காலத்தில் இலக் கியப் பரப்பு மிக விரிவடைந்திருக்க வேண்டும். அந்த இலக்கியங்கள் அனைத்திற்கு முரிய இலக்கணங்களை ஒரே நூலில் அமைப்பதென்பது அரிய செயலாயிற்று. அக்காலத்தில் ஒவ்வொரு தமிழுக்கும் தனித் தனியே இலக்கணம் தோன்றியது. இயற்றமிழுக்கு இலக்கண மாகத் தொல்காப்பியமும், இசை நாடகங்களுக்கு இலக்