பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தமிழ்க் காப்பியங்கள்

கணமாக வேறு சில நூல்களும் தோன்றின. இங்ங்னம், இலக்கியங்கள் விரிய விரிய இலக்கணங்களும் புதுமை யும் விரிவும் பெற்றன. தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரத்துள் தமிழுக் குரிய ஐவகை இலக்கணங்களும் கூறப்பட்டன. பிற். காலத்தில் பொருள், யாப்பு, அணியென்பவற்றிற்குத் தனித் தனியே இலக்கணங்கள் எழுந்தன; அவற்றுள் ளும் அகப்பொருள் புறப்பொருளெனவும், யாப்பு பாட்டியல் எனவும் ஒன்றற்கே சில பிரிவுகள் உண் டாயின. இவ்வளவும் இலக்கியங்கள் நாளடைவிற். பெருகி வருவதைக் காட்டுகின்றன.'

காப்பிய இலக்கணத்தோடு தொடர்புடைய தமிழ் இலக்கணப் பகுதிகளை நான்கு வகை யாக்கலாம்.

1. நாடகத் தமிழிலக்கணம்

2. யாப்பிலக்கணம்

3. அணியிலக்கணம்

4. பாட்டியல்கள்.

இந்நால்வகை யிலக்கணங்களும் உள்ள நூல்கள் தமிழிலே பல உள்ளன. அவற்றைக் கொண்டு, கவியின் இயல்பையும் காப்பியத்தின் தன்மையையும் தமிழ்ப் புல வர்கள் வரையறுத்த முறையை உணர்ந்துகொள்ளலாம். இந்நால்வகை இலக்கணங்களையும் கூறும் நூல்களைப் பற்றி இனி ஆராய்வோம்.

ASA SSAS A SAS SSAS SSAS SSAS SSAS

1. தமிழ்நெறி விளக்கம், முகவுரை, ப.wi, Wii, பார்க்க.