பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கண நூல்கள் 17 1. நாடகத் தமிழ் இலக்கணம்

வடமொழியில் நாட்டிய சாஸ்திரம் இயற்றிய பரத முனிவர் அந்நூலில் நாடகத்திற்கு அங்கமாகிய அவி நயங்களுள் ஒன்ருகும் வாசிகாபிநய மென்பதைப்பற்றி விரித்துக் கூறுமிடத்துக் காப்பியங்களுக்கு அழகு செய்யும் அலங்காரங்களைப்பற்றிய இலக்கணங்களை அமைக்கின்ருர், காப்பியத்துக்குரிய அலங்காரங்கள், பத்துக் குணங்கள், பத்துக் குற்றங்கள், 86 இலக்கணங் கள் ஆகியவற்றை அவர் எடுத்துரைக்கிருர்.”

மிகப் பழங் காலத்திலே காவியாலங்காரங்களும் காவியமும் நாடகத்திற்கு அங்கமாகவே கருதப்பட்டன. நாளடைவில் நாடகத்தைப் பற்றியும் காவியத்தைப் பற்றியும் தனித்தனி இலக்கணங்கள் எழுந்தன. பிற்காலத்தில் நாடகத்தையும் காவியங்களுக்குள் அடக்கி யவர்களும் உண்டு.” -

வடமொழி அணி யிலக்கண ஆசிரியர்களாகிய பாமஹரும் தண்டியாசிரியரும் காப்பியத்தின் வகை களில் நாடகத்தையும் அமைக்கின்றனர். தமிழிலும் மணிமேகலையாசிரியர், - - . . .

'நாடகக் காப்பிய நன்னூல் நுனிப்போர்” (19: 80) என்று நாடகத்தையும் காப்பியமாகக் கூறுதல் காண்க.

'இரண்டென்னது இயலு மென்ற மிகையால் பத்து வகைப்பட்ட நாடகச் சாதியும், கோவையும் பொருட்

1 Some Aspects of Literary Criticism in Sanskrit by A. Sankaran, M. A., Ph. D. p. 16.

2. Studies in the History of Sanskrit Poetics by S. K. Dept. II.

, k. `. -

o 3. Ibid, p. 2 and Introduction to Kavyalankara of Bharraha by B. N. Sarma and Baldeva Upadhyaya, p. 64.

த. கா-2