பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தமிழ்க் காப்பியங்கள்

டொடர்நிலைப்பாற் படுமெனக் கொள்க' (தண்டி. உரை) என்பதும் இதனை வலியுறுத்தும். நாடகத்தைத் திருசிய காவியமென்றும், பொருட்டொடர் நிலையைச் சிராவிய காவியமென்றும் வட நூலார் வழங்குவர்.'

நாடகத்தில் இனிமையை உண்டாக்குவதற்குக் கருவிகளாகக் காப்பிய அலங்காரங்கள் பயன்படுகின்றன. இவற்றைப் பரத முனிவர் 14-முதல் 20-ஆவது வரை யுள்ள ஏழு அத்தியாயங்களில் விரித்துரைக்கின்ருர். நாடகச் சுவையும் காப்பியச் சுவையும் பெரும்பாலும் ஒப்புமையுடையன. நாடக இலக்கியங்கள் ஒரு கதை யினைக் கூறுவதாக இருக்க வேண்டும். அக்கதை பொருட் டொடர்நிலைச் செய்யுளேயாம்.

'STLఉ-5ణన தழுவி வரும் கூத்து’ (சிலப். ப. 80.)

இக்காரணங்களால் நாடக இலக்கணத்திலும் காப்பி யத்துக்குரிய இலக்கணங்கள் கலந்திருத்தல் இயல்பே யாகும். நாடக இலக்கணத்தை உரைக்கும் நூல்களில் காப்பிய இயல்பை உரைக்கும் பகுதிகள் உண்டென்ப தற்குப் பரத முனிவர் இயற்றிய வடமொழி நாடக நூலே சான்ருகும். அதனைப் போலவே தமிழில் நாடகத் தமிழிலக்கண நூல்களிலும் பொருட்டொடர் நிலைகளுக் குரிய இலக்கணங்கள் இருத்தல் வேண்டுமென்று கொள்ளுதல் பிழையன்று.

அகத்தியம்

இப்பொழுது அறியப்படுவனவற்றுள் மிகப் பழமை யானதும் தமிழின் வகைகளாகிய இயல் இசை நாடகம் 1. Introduction to the edition of Kavyaprakasa of Mammata

Bhatta with the Sanketa Commentary of Manikyachandrasuri by R- Shamaa 8astry, p. ix