பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கண நூல்கள் 19

என்னும் மூவகைக்கும் இலக்கணம் வகுப்பதுமாகிய நூல் அகத்தியமாகும். அது தண்டமிழ் முனிவரெனச் சிறப் பிக்கப்பெறும் அகத்தியரால் இயற்றப்பெற்றது. மூவ கைத் தமிழுக்கும் இலக்கணம் கூறுதலின், பிண்டத்தை அடக்கிய பெரும்பிண்ட மென்று அதனைக் கூறுவர்.

தொன்றுமொழிப் புலவரது பிண்டமென்பவென்ற தற்ை பிண்டத்தினையும் அடக்கி நிற்பது வேறு பிண்டம் உளதெனக் கொள்க. அது முதனுrலாகிய அகத்தியம் போலும்; என்ன? அஃது இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என்று மூன்று பிண்டத்தினையும் அடக்கி நிற்றலின் (தொல். செய்யுள். 172, பேர்.) அந்நூல் மூன்று சங்கத்தார்களுக்கும் இலக்கணமாய் அமைந்து பல புலவர்களாலும் பெரிதும் போற்றப் பெற்றும் முதனூலாக எண்ணப் பெற்றும் வந்தது. அதன் சிறப்பு,

'வீங்குகடல் உடுத்த வியன்கண் ஞாலத்துத்

தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகென

வாளுே ரேத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆளுப் பெருமை அகத்திய னென்னும் அருந்தவ முனிவன் ஆக்கிய முதனுால்” . என்னும் பன்னிரு படலப் பாயிரச் சூத்திரத்தாலும்,

அகத்தியமே முற்காலத்து முதனூலென்பது உம், அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன் வழி நூலென்பது உம் (தொல், 90, பேர்.), தமிழ் நாட்டு வழக்கிற்கு முதனூலாகிய அகத்தியத்துள்' (டிை. 107, டேன்.) - -

என்பவற்ருலும் விளங்கும்.

1. சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் by Mahamahopadhyaya Dr. W. Swaminatha Iyer, p. 10.