உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 173

"உலகக் கவிப்பு என்னும் பெயர் சக்கரவர்த்திகள் தாம் படைத்த திரி சொல்லென உணர்க. பண்டு நம்பிகாளியார் கடற்குப் பெயர் மழுவென்று இட்டு, எறிதலும் கூர்த்தலும் திரைத்தலும் உடைய தென்ருர், அதுபோலும் இதுவென்க' என்று கூறினர். இங்கே ஒரு கவிஞர் ஒரு புதுச் சொற் படைத்தமைக்கு மற்ருெரு கவிஞர் படைத்த படைப்பை அவர் உதாரணம் காட்டுகிருர். இவை இரண்டும் நமக்கு உதாரணங்கள் ஆகின்றன. இப் புதிய படைப்புச் சொற் களைப்பற்றி வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் கூறும் பின்வரும் கருத்து இங்கே அறிதற்குரியது :

ஆகவே, நிகண்டேறி இலக்கியங்களிலும் பயின்று வருஞ் சொற்கள் தவறுடையனவென்பது, பின்னர் நிகழும் ஆராய்ச்சிகளிற் புலப்பட்டாலும் அவற். றைத் திருத்தப் புகுதல் ஒருநாளும் ஓராற்ருனும் சாலாது. பிழை பிழையாகவேதான் இருத்தல்' வேண்டும். மாற்றுதல் பாஷையின் வரலாற்றிற்குத் தீங்கு பயக்கும். இப்படிப் பிழை போன இடங்கள் ஆங்கிலம் முதலிய பிற பாஷைகளில் எத்துணையோ உள.' - சொற் பொருளை மாற்றி வழங்கும் அதிகாரமும் காப் பியக் கவிஞருக்கு உண்டு. தக்கயாகப்பரணி உரையாசிரி யர், புண்டரீகம் என்பது செந்தாமரைக்குப் பெயர்; புண்டரீகாட்ச னென்ப; இது செந்தாமரைக்குப் பெயரன்ருயின் தந்திரவுத்தியாலும் தொடர்நிலைச் செய்யுளாலும் உணர்க என்று ஓரிடத்தில் உரைத்தனர்." வடமொழி நிகண்டு புண்டரீகம் என்பது வெண்டாமரைக்

1. தாழிசை, 213, உரை. 2. தமிழ் மொழியின் வரலாறு, ப. 83. 3. தக்க. 22, உரை. -