உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 தமிழ்க் காப்பியங்கள்

குப் பெயரென்று கூறுகிறது. ஆயினும் செந்தாமரைக்கும் அது வருகின்றது. எனவே ஒரு செய்யுளின் பொருளைத் துணிதற்கு நிகண்டைக் காட்டிலும் தொடர்நிலைச் செய்யுளே தக்க கருவி யென்பது அவ் வுரையாசிரியர் கொள்கையென்று அறியலாகும். -

சொல்லின் உருவ அமைப்பில் மாறுபாடு காப்பியங் களில் உளவேல் அவற்றைப் பழைய முறையில் அமைந்ததன்று என்று விலக்குதல் பிழை. அத்தகையன கோடற்கு உரியனவே. காப்பியங்களில் மானுடன், என்பது மானிடன் என்றும், குரிசில் என்பது குருசில் என்றும், பரிதி என்பது பருதி என்றும் வருதலை நாம் மேற்கொள்ள வேண்டும். கவியுலகாட்சியை நடத்தும் கவியரசர் சென்ற நெறியே நம் நெறி. அவர் கண்டதே வழக்கு.

"தானே உலகாள்வான் தான்கண்ட தேவழக்காம்

ஆனல்மற் ருரதனை அன்றென்பார்” - என்று காரைக்காலம்மையார் கூறுவதை நாமும். கூறி அமைதல் வேண்டும். -

1. மானுஷன் என்பது தமிழில் மானிடன் என்று உபயோகப்பட்டு வந்திருக்கிறது. திருவாசகத்தில் நீத்தல் விண்ணப்பத்தில், 'மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன்’ என்ற அடியில் மானிடன் என்றே சிலேடையில் அமைக்கப்பட்டிருக்கிறது. பல நூற்ருண்டுகட்கு முன்னர் யமகத்தில் சில புலவர்கள் மானிடன் என்ற வார்த்தையை உப யோகித்திருக்கிருர்கள். அதனை எப்படித் திருத்த முடியும்? தமிழிலும் வடிவம் மாறிச் சொற்கள் வந்திருக்கின்றன. சிலப்பதிகாரத்தில் திருமகள் கூத்துக்குப் பாவைக்கூத்து என்னும் பெயர் காணப்படுகின்றது. பின்னர், பாவை என்பதைப் பரவை என்று நிச்சயித்து அதன்ன எதுகையில் அமைத்துப் பிற்காலத்தார் பாடிவிட்டார்கள். அவ்வாறு பாடியவர்கள் பெரியோராகையால் அதை நாம் திருத்த முற்படாமல் அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டியதுதான் முறை. கொடை-குடை என்றும், எடை . இடை என்றும் செய்யுட்களிற் சிலேடையில் அமைக்கப் பட்டு வழங்கி வந்திருக்கின்றன.-டாக்டர் உ. வே. சாமிகாத ஐயர்: சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், ப. 177, 178.

2. கைகலபாதி காளத்திபாதி அந்தாதி.