உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 175

"டாகினிகள் எனத் தமிழில் மொழி முதலாகா, அவ் வெழுத்திடுதற்குக் காரணம், சந்தியிசை வஞ்சி என்பாரும், சருவஞ்ஞ கவி என்பாரும்...உளர்' என்ற தக்கயாகப் பரணி உரையாசிரியர் கூற்றும், அந்நூற் பதிப்பாசிரியராகிய பூரீமத் ஐயரவர்கள், சருவஞ்ஞ கவி: இது குறிப்புச் சொல், எம்முறையினும் பாடும் வன்மை உடையரென்றபடி, பெரிய கவிகள் விதிகளையும் கடந்து இலக்கியம் அமைப்பார்கள்; "இலக்கியங் கண்டதற் கிலக்கண மியம்பலின்’ என்பதல்ை அத்தகைய கவிகளுடைய இலக்கிய அமைதியே இலக்கணமாம் என்பது பெறப்படும். கம்பர் முதலிய மகாகவிகளிடத்து இத் தகைய இயல்பைக் காணலாம். 'நாராயணனை நராயணனென் றேகம்பன் ஓராமற் சொன்ன உறுதி யால்" என்ற காளமேகத்தின் பாட்டும் இதனை வலி யுறுத்தும்' என்று எழுதியுள்ளனவும் இங்கே பயன் படுவனவாகும்.

1. தாழிசை. 433, உரை. 2. தக்கயாகப் பரணி, ப. 317.