உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய அலங்காரங்கள் 181

'அக்காரக் கனி நச்சுமனர்' என்னும் பெயரால் வழங்கலாயினர். நச்சுமனர் என்பது அவர் இயற்பெயர். அவர் பெயர் அங்ங்னம் அமையினும், அவர் இயற்றிய கவிகள் இனியனவாக இருந்தன. ஒட்டு மாங்கனியைப் போல அவற்றை நுகர்ந்தவர்கள், அக்காரக் கணி நச்சுமனர்' என்று அவரை வழங்கலாயினர். அக்காரம் என்றது ஸஹகாரமென்பதன் திரிபாகும். வடநூலார் ஸ்ஹகாரம் செய்யுட் பாகத்திற் சிறந்ததென்று கூறுவர்.

கம்பரும்,

'காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள்'

என்று கவிதைகளைக் கனிகளாக உருவகம் செய்தார்.

“முறுக்கம் பாகம் பாக முறுந் தமிழ் - பாடுங் கடன்பணியே”

என்று சிவஞான முனிவரும்,

'பாகத்தி னுற்கவிதை'

என்று தாயுமாளுரும் பாகம் என்ற சொல்லையே வழங்கினர். w

செய்யுட் குணமாகிய செறிவுகுறித்துக் கூறும் தண்டியலங்கார உரையாசிரியர், 'மாங்கனியும் தீம்பாலும் வருக்கைச் சுளையும் சருக்கரையும் தம்முள் வேறுபட்ட சுவையவெனினும் கூறுவது மதுரம் ஒன்றன்றே? அது போல எழுத்துச் செறிவும், சொற்செறிவும்,பொருட்செறி வும் செறிவு என்றே சொல்வதில்லது, பிறிதொரு வகை பேசிற் பெருகிய அகல முடைத்தாமெனக் கொள்க’

1. கம்ப ராம்ாயணம், காட்டுப் படலம், 51. 2. கம்பரத்தாதி, 93. 3. த்ண்ைடி, 28, உரை,