உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 தமிழ்க் காப்பியங்கள்

'அஃதேல் இன்ன இலக்கணம் எல்லாம் முன்னை யோர் மொழிந்தது, நடை பல பயின்ற வடமொழிக் கன்றே, செந்தமிழ் மொழியின் வந்தவாறு என்ன? எனின்,- இதன் முதல்நூல் செய்த ஆசிரியர் உலகத்துச் சொல்லெல்லாம் சம்ஸ்கிருதம், பிராகிரு தம், அவப்பிரஞ்சம் என மூன்று வகைப்படுத்தினர். அவற்றுள் சம்ஸ்கிருதம் புத்தேளிர் மொழியெனவும், அலுப்பிரஞ்சம் இதர சாதிகளாகிய இழிசனர் மொழி யெனவும் கூறினர். அதனுல் பிராகிருதம் எல்லா நாட்டு மொழி யெனவும் படும். அல்லது உம், பிரகிருதி யென்பது இயல்பாகலான், பிராகிருதம் இயல்பு மொழி. அந்தப் பிராகிருதத்தைத் தற்பவம், தற்சமம், தேசியம் என மூன்று ஆக்கினர். இவற்றையே செய்யுட்சொல் எனத் தமிழ்நூலாரும் வேண்டினராகலின். இவ்வாற்ருன் தமிழ்ச் சொல் லெல்லாம் பிராகிருதம் எனப்படும். அச்சொற்களால் இயற்றப்படும் எல்லாக் கவிக்கும் அவ்வலங்காரம் அனைத்தும் உரிய வாகலின், ஈண்டு மொழி பெயர்த்து உரைக்கப்பட்டன.” தமிழ்விடு தூதுடையார் வடமொழிக் காப்பியங் களும், அலங்காரங்களும் தமிழுக்கு உபகாரப்படுவன வாதலின் அவற்றைத் தமிழோடு தோழமைப் படுத்துகின்ருர் : *

"நல்லபெருங் காப்பியங்கள் நாடகா லங்காரம்

சொல்லரசே உன்னுடைய தோழரோ.”

இலக்கியங்களில் கண்ட இலக்கணங்கள் காப்பியங்களைப்பற்றிய இயல்புகளைச் சொல்லும் இலக்கண நூல்களையன்றி இலக்கியங்களிலும் அங்கங்கே

1. தண்டி. 25, உரை. 2. கண்ணி, 43,