உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய அலங்காரங்கள் 201

புலவர்களால் கவிதை, காப்பியம் என்பவை சம்பந்தமான செய்திகள் சொல்லப் பெறும் என்பது முன்பு கூறப் பட்டது. கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பர் தம்முடைய இராமாயணத்திலே காப்பியங்களின் இயல்பாகப் பலவற் றைச் சொல்கிருர் : - -

புவியினுக் கணியாய் ஆன்ற

ப்ொருள்தந்து புலத்திற் ருகி அவியகத் துறைகள் தாங்கி

ஐந்திணை நெறிஅளவிச் சவியுறத் தெளிந்து தண்ணென்

ருெழுக்கமும் தழுவிச் சான்ருேள் கவியெனக் கிடத்த கோதா

வரியினை வீரர் கண்டார்.” 'காப்பியம் உலகுக்கே அழகு செய்வது; உறுதிப் பொருளைப் பயப்பது; அறிவுக்கு இன்பம் ஊட்டுவது; அகப் பொருள் துறைகளையும் ஐந்திணை நெறியையும் புலப்படுத்துவது; தெளிவும் இனிய தடையும் அமைத் தது என்ற கருத்துகள் இச் செய்யுளாற் பெறப்படு கின்றன. புவியினுக்கணியாய் என்பதல்ை காப்பியம் ஏனை இலக்கியங்களினும் சிறந்து உலகத்தில் கலைஞர்கள் உண்டாக்கும் அழகுப் பொருள்களோடு ஒன்ருக விளங்கு மென்பது தெரியவரும். ஆன்ற பொரு ளென்றது அறம் முதலிய நாற்பொருளையும் குறித்தபடி.

ஒரு பொய்கையின் இயல்பைக் குறிக்கையில் அது மிகவும் ஆழமான தென்ருலும், .

'கற்பகம் அனேயஅக் கவிஞர் நாட்டிய

சொற்பொரு ளாமெனத் தோன்றல் சான்றது" என்ருர் கம்பர். கவியின் பொருள் தவில்தொறும் நயம் படுவதாக இருப்பினும், படிப்போருக்குக் கலக்கமின்றித் தெளிவுறப் பொருட் சுவையை உண்டாக்கும் தன்மை காப்பியத்துக்கு அழகாகும். சொற்பொருள் தெளிவுபட